வாரம் ஒரு கவிதை …” பால்ய வீதியில் …”

பால்ய வீதியில்
================
பால பருவத்தில், வீதியில் துளிர்த்து
படித்த பள்ளியில் அரும்பி , கல்லூரியிலும்
மலர்ந்து செழித்தது எங்கள் நட்பு !
நானும் அவனும் பால்ய நண்பர்கள்
என்னும் ஒரே ஒரு பிணைப்பு
இணைத்து விட்டதே  எங்களை
இன்று வரை !
வீதியில் விளையாட்டாய் துளிர்த்த  நட்பு
வாடவில்லையே இன்னும் !மணக்குதே
இன்றும்! காரணம் என்ன ?
என் வாழ்க்கை வீதியில் முளைத்த பிற
நட்புகள் பல வெறும் “ரயில் நட்பாய் “
மாறிய காரணம் என்ன ?
இனம் ,மதம் ,குலம்  மறந்து என்  நண்பனுடன்
கை கோர்த்து ஓடி  விளையாடிய
அந்த பால்ய வீதியை இன்று தேடுகிறேன்
நான் !  என் கேள்விக்கு விடை தேட !
K.நடராஜன்
07/10/2018

வாரம் ஒரு கவிதை ….” அன்பின் வழியது …”

அன்பின் வழியது …
——————-
அன்பின் வழியது மறந்தால், மறையும் நல்ல
பண்பும் பாசமும் … தடம் மாறும்  வழி ,
மறைக்கும் கண்ணை… தொடரும் பிழைகளும் !
அம்மா என்றால் அன்பு ..அன்பு என்றால்
அம்மா … அன்பின் வழியது அம்மாவின்
அரவணைப்பும் பாசப்பிணைப்பும் !
வலிக்குது மனசு இன்று தடம் புரண்ட
ஒரு பேதையின்  செயல் கண்டு !
துடிக்குது நெஞ்சம் பிஞ்சு இரண்டின்
உயிர் பறித்த ஒரு  வஞ்சகப் பெண்ணின்
நஞ்சு மனதை நினைத்து !
வள்ளுவன் காட்டிய அற வழியில் நடக்க
முடியவில்லை அந்த பெண்ணுக்கு …அந்த
பெண்ணின் தலை எழுத்து அது !
பிழை ஏதும் செய்யாத அந்த பிஞ்சு
இரண்டும் செய்த பாவம் என்ன ?
அற வழி மறந்த அந்த பெண்ணுக்கு
அன்பின் வழியும் அறவே மறந்து போனதே !
அதை நினைத்தால்  வலிக்குது மனசு !
dated 13/09/2018