” சொல்லு ..ராம ராமா …சிவ சிவா …”

ஆந்த்ராவைச் சேர்ந்த ஒரு சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவர் பெரியவாளை தர்சனம் பண்ண தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்துக்குப் போனபோது, சந்த்ரமௌலீஸ்வரர் சன்னிதியில் தீப நமஸ்காரம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும் அங்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து,

“எல்லாரும் ராம,ராமா…சிவ, சிவா…ன்னு சொல்லுங்கோ!” என்று சொல்லிவிட்டு குறிப்பாக ஒரு பையனைப் பார்த்து,

“சொல்லு! ராம,ராமா….சிவ சிவா!” என்றார். பையன் விழித்தான்! பக்கத்தில் இருந்தவர் பெரியவாளிடம்,

“பெரியவா….அவன் ஊமை…பொறவிலேர்ந்தே !…”

“அதுனால என்ன? அவன் சொல்லட்டும்…சொல்லுடா கொழந்தே! ராம,ராமா…சிவ சிவா….” என்று பரம பாக்யம் செய்த அந்த குழந்தைக்கு பெரியவா திருவாக்கால் நாமோபதேசம் வந்ததும்……

“ராம,ராமா…..சிவ சிவா…..” பிறவி ஊமை அழகாக பகவானின் நாமத்தை சொன்னது!

அதைக்கண்ட சம்ஸ்க்ருத பண்டிதர் “எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாதோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளீயான என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்ற அழகாகப் பொருள்படும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் தக்ஷணமே கல்பித்துப் பாடினார். அதுதான் முதன்முதலாக அவர் மனஸில் ஸ்புரித்த ஸ்லோகமாம்!
————————————
“குரு” என்ற ஈரெழுத்து “ராம” நாமத்துக்கு சரி நிகர் சமானம்.குரு என்றால் இருளைப் போக்குபவர் என்ற அர்த்தமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், கு, ரு என்ற இரண்டெழுத்துமே எழுதும் போதே மேலே இடது பக்கம் ஆரம்பித்து, வலமாக சுழித்து, கடைசியில் ஆரம்பித்த மேல் ஸ்தானத்துக்கே சென்று முடியும். இது ‘குரு’ என்ற மிக உன்னதமான சொல்லுக்கு தமிழ் செய்த நமஸ்காரம்.

சத்குருவின் திருவடிகளை சிந்திப்பவர், அவ்வளவு ஏன்? சத்குருவின் கடாக்ஷத்தில் விழுந்தவர்கள் மேன்மையைத்தான் அடைவர் என்று உணர்த்துகிறது.

அதே போல், சத்குருவானவர், தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து [ஆத்மஸ்வரூபம்] இறங்கி, பொய், புரட்டைத் தவிர எதுவும் தெரியாத அல்லது தெரிந்தும் அலக்ஷியமாக கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கெக்கே பெக்கே என்று அலையும் நம்மை மாதிரி ஜீவன்களை [ஈ, எறும்பும் இதில் அடங்கும்] யானை தன் தும்பிக்கையால் வழிப்பது போல், ஒரே வழியாக வழித்து, வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு போய், மேலே தன் ஸ்வரூபத்தில் சேர்த்துக் கொண்டு விடுவார். அல்லது அல்லாக்காகத் தூக்கி பகவானின் சரணத்தில் போட்டு விடுவார். யாருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் குருவே தெய்வம்; இதில் நம்முடைய அடம், அஹம்பாவம் எதுவுமே செல்லுபடியாகாது. ஒழுங்காக ஒத்துழைத்தால் [அவர் சொன்னபடி நடந்தால்] நம்முடையது உண்மையான ஸுகஜீவனம்; இல்லாவிட்டாலும் அவர் எப்படியும் நம்மை சுருட்டி இழுத்துக் கொண்டுதான் போகப்போகிறார். அடம் பிடித்தால், நமக்குத்தான் படு கஷ்டம்.

நமக்கு கீழ்வாலக்கமாகப் போகும் குர..ங்கு என்ற வார்த்தை மிகவும் பொருந்தும். கு என்ற எழுத்துக்கு அப்புறம் இரண்டாவது எழுத்தாக ரு அல்லது ர….எதில் சேரப்போகிறோம் நாம்?

“காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்லுவார்கள். நமக்கும் “குரு காமாலை” பீடித்து காண்பதெல்லாம் நம் சத்குருவாகத் தெரிந்துணர நம் குருநாதரை வேண்டித் தொழுவோம்.

Read more: http://periva.proboards.com/thread/4390/#ixzz3VRnKJY3X

source:::: http://www.periva.proboards.com

Natarajan

“பகவானுக்குத் தெரியாமல் நாம் எதுவும் செய்ய முடியாது …”

குரு சிஷ்ய பாவம்கறது பாரம்பரியமா இந்து மதத்துக்கே உள்ள தனிப் பெருமை. மாதா, பிதாவுக்கு அப்புறம், தெய்வத்தைவிடவும் முன்னதா குருவைத்தான் சொல்லி இருக்கு.
அந்தக் காலத்துல எல்லாம் குருவாக இருக்கறவர் ஒரு ஆக்ஞை இட்டுட்டான்னா அது எவ்வளவு சிரமமானதா இருந்தாலும் செய்யறச்சே கஷ்டங்கள் பலதும் வந்தாலும், கொஞ்சமும் சலிச்சுக்காமலும் தவிர்க்காமலும் சீடர்கள் செய்து முடிச்சுடுவா.
அதேசமயம் அவஸ்யம் இல்லாத எந்தக் காரியத்தையும் அவாளைச் செய்யச் சொல்லமாட்டார் குருநாதர். அப்படிப்பட்ட காலகட்டத்துல நடந்த குருகுல அனுபவம் ஒண்ணை முதல்ல சொல்றேன். அதுக்கும் மகாபெரியவாளுக்கும் என்ன சம்பந்தம்கறதை அடுத்ததா சொல்றேன்.
மூணு இளைஞர்கள் ஒரு குரு குலத்துக்கு வந்தாங்க. குருதேவரை தரிசனம் பண்ணி, தாங்கள் அவர்கிட்டே சீடர்களா சேர்றதுக்காக வந்திருக்கறதா சொன்னாங்க.
இந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கறதுக்கு முன்னால, நேர்முகத் தேர்வு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவைக்கிறது இப்படியெல்லாம் தகுதித்தேர்வு நடத்தறாங்க இல்லையா? அத அந்தக் கால குருகுல முறையில இருந்துதான் வந்தது.
சின்னவயசுலயே குருகுலத்துல சேர்த்து படிப்படியா கத்துக் குடுத்தது ஒருவகை. இன்னொரு வகை நடுத்தர வயசுல குருகுலத்துல சேர்ந்து படிக்கறது. இதுல இரண்டாவது முறையில சீடர்களை சேர்த்துக்கறச்சே அவாளுக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் சேர்த்துக்குவாங்க.
அந்த வழக்கப்படி, தன்கிட்டே பாடம் கத்துக்க வந்த மூணு இளைஞர்களுக்கும் ஒரு தேர்வு வைச்சார், குருநாதர்.
மூணுபேர்கிட்டேயும் ஆளுக்கு ஒரு பறவையைத் தந்தார். “இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு கொன்னுட்டு வந்துடுங்கோ!’ அப்படின்னார்.
இளைஞர்கள் பறவையை எடுத்துண்டு போனாங்க. ரெண்டுபேர் கொஞ்ச நேரத்துலயே வெறும் கையோட திரும்பி வந்துட்டாங்க. மூணாவது இளைஞர் ரொம்பநேரம் கழிச்சு வந்தான். அவன் கொண்டுபோன பறவை அவன் கையிலயே இருந்துது.
குருநாதர் அவங்ககிட்டே நடந்ததை சொல்லச் சொன்னார்.
முதல் இளைஞன் சொன்னான் “நீங்க சொன்னபடியே பண்ணிட்டேன். என் இருப்பிடத்துல ஓர் அறைக்குள்ள போய், கதவை இறுக்க மூடிட்டேன். ஒருத்தரும்… ஏன் சூரிய வெளிச்சம் கூட உள்ளே வரமுடியாதபடி இருண்டுடுத்து. உடனே அங்கேயே வச்சு, அதைக் கொன்னுட்டேன்’.
ரெண்டாவது இளைஞன் அதைக்கேட்டு சிரிச்சான். “நீ குருநாதர் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலை. யாருமே பார்க்காதபடி பறவையைக் கொல்லச் சொன்னார். ஆனா, நீ அதைக் கொன்ன சமயத்தல அந்தப் பறவை உன்னைப் பார்த்திருக்கும் இல்லையா? அதனால நீ தோத்துட்டே நானும் உன்னை மாதிரிதான் இருட்டு றைக்கு அதை எடுத்துண்டு போனேன். ஆனா அங்கே வைச்சு அதோட கண்ணை ஒரு துணியால கட்டிட்டு வதைச்சுட்டேன். குருநாதர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு செயல்பட்ட என்னைத்தான் அவர் சீடனா ஏத்துப்பர். ஏன்னா, டுத்தவன் அவர் சொன்னதையே கேட்காம பறவையை உயிரோட திருப்பி எடுத்துண்டு வந்திருக்கான். அதனால தகுதித் தேர்வுல ஜெயிச்சது நான்தான்!’
அமைதியாக நின்றிருந்த மூன்றாவது இளைஞனைப் பார்த்தார் குருநாதர், “நீ என்னப்பா சொல்லப்போறே?’ அப்படின்னு கேட்காமலே கேட்ட அவரோட பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சுண்டு பேச ஆரம்பிச்சான் அவன்.
“சுவாமி, நீங்க சொன்னமாதிரியே பறவையை எடுத்துண்டு போனேன். ஆனா, எங்கே போய் நின்னாலும் கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார்னே, தோணித்து. யாருக்கும் தெரியாம பண்ணணும்னா, அது பகவானுக்கும் தெரியக்கூடாதே? எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்கற, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கற அவருக்குத் தெரியாம எந்த ஒரு காரியத்தையும் பண்றது சாதித்தியமில்லைன்னு தோணித்து. அதோட, உயிர்வதை செய்யறதுல உங்களுக்கு எந்த விருப்பமும் இருக்காது. அதனால் அதை திரும்ப எடுத்துண்டு வரணும்கற அர்த்தத்துலதான் நீங்க அப்படி சொல்லியிருக்கணும்கறதும் புரிஞ்சுது. அதான் பறவையைக் கொண்டு வந்துட்டேன்’
சொல்லி முடிச்ச அவனை, சந்தோஷமா சீடனா ஏத்துண்டு ஆசிர்வதிச்சார் குருநாதர். இந்தக் கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா? உலகத்துல நாம எங்க இருந்தாலும் சரி, பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை விளக்கத்தான்.
சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன்.
ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது.
வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா.
பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும்.
ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.
ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.
“மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!’ உத்தரவிட்டார்.
அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். “பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!’ ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா.
ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.
“இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்’
பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, “பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்’ கேட்டா.
“அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே… அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!’
மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.
சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி, “என்னை மன்னிச்சுடுங்கோ… காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.
கொஞ்ச நேரம் கழிச்சு, “உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!’ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.
இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!

– பி. ராமகிருஷ்ணன் in http://www.dinamalar.com….kumudam bhakthi

Natarajan

 

“நீ அஞ்சாம் க்லாஸ் படிச்சியா… ? “

தாத்தா, மாடு எனக்கு தறியா?

KVK சாஸ்திரியை வளவனூரில் தெரியாதவரே கிடையாது. ஓய்வு ஊதியம் பெற்று அங்கே சொந்தமான வீடு, நிலம், மாடு, மனை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தக் காலத்திலே Rs 136/- பென்ஷன் ரொம்ப பெரிய தொகை. மூன்று கட்டு வீடு, இரு பிள்ளைகள. ஒருவன் வருமான வரி இலாகாவில் பணி. இன்னொருவர் ஏன் அக்காவின் கணவர், அப்பாவின் சொத்தே போதும் என்று அவரும் ஒய்வு பெற்று விட்டார். அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண். வீட்டிலே வருவோரும், போவோருமாக ஒரு பெரிய ராஜ சமஸ்தனமாகவே இருக்கும். சிவ பூஜா விதிகளில் தேர்ச்சி பெற்றவர்.

ஒரு சமயம் பெரியவா, விழுப்புரத்தருகே உள்ளே எல்லீஸ் சத்திரம் என்ற ஊரில் கேம்ப். அன்று பிரதோஷம். சிறிய கிராமமானதால் கூட்டம் அதிகம் இல்லை. நான், ஏன் அக்கா, கே.வி.கே. சாஸ்திரி, அக்காவின் பையன் வித்யா சங்கர் பிரதோஷ பூஜைக்கு சென்றிருந்தோம். வழக்கம் போல பெரியவா, ருத்ராக்ஷம் முதலியவைகளை அணிந்து நேரே கைலாசத்திலிருந்து இறங்கி வந்த பரமேஸ்வரனைப் போல காட்சி. அனைவருக்கும் தரிசனம் ஆயிற்று.உத்தரவு பெற்று வீடு திரும்பலாம் என்று நாங்கள் பெரியவா உட்கார்ந்திருந்த கீத்து கொட்டகையில் நுழைந்தோம்.

“கிருஷ்ணசுவாமி, எப்படி இருக்கே?” ஏகாதசி புராணம் எல்லாம் நன்னா நடக்கிறதா?” என்றார் பெரியவா.

நாங்கள் அனைவரும் நமஸ்கரித்தோம். சிறுவன் போட்டனே ஒரு கேள்வி.

“பெரியவாளைப் பார்த்து “தாத்தா, நீ வெச்சிண்டு இருக்கேயே மாடு அது எனக்கு தறியா” என்றான்.

உடனே ஏன் சகோதரி, “அப்படி பேசப்படாது” என்று பிள்ளையை இழுக்க, பெரியவா கருணையுடன், “உனக்கு அந்த மாடு வேணுமா? தரேன் – ஆனா ஒரு கண்டிஷன்” என்றார்.

“நீ இப்போ என்ன படிக்கற?” என்று வினவினார்.

“மூணாம் கிளாஸ்” என்று உடனே பதில் வந்தது.

பெரியவா உடனே, “நீ ஐந்தாம் கிளாஸ் படித்திவிட்டு வா, நான் உனக்கு மாடு தருகிறேன்” என்றார்.

நாங்கள் ஸ்தம்பித்து நிற்கும் நிலையில் சங்கர் பெரியவாளை பார்த்து “சத்தியமாக?” என்று கேட்டான்.

பெரியவா, “குழந்தாய் நான் சொன்னா வார்த்தையை தவற மாட்டேன். நீ போய்விட்டு வா” என்று சிரித்துக்கொண்டே பிரசாதம் வழங்கினார்.

இரண்டு மூன்று வருடங்கள் ஓடி விட்டது. இப்போது சங்கர் ஆறாம் வகுப்பில் போர்ட் ஹைஸ்கூலில் படிக்கிறான். அப்போது பெரியவா மறுபடியும் வளவனூருக்கே வந்திருந்துந்தார். பெரியவாளை தரிசிக்க சென்றோம். வழக்கம்போல் குசலப்ப்ரச்னம் ஆன பிறகு, பெரியவா புன்முறுவல் பூத்தார். அதன் காரணம் எங்களுக்குப் புரியவில்லை.

திடீரென சங்கர் எல்லீஸ் சத்திர உரையாடலை ஞாபகப்படுத்தி, “இப்போது நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன். எனக்கு மாடு வேணும்” என்று கேட்டான். பெரியவா அதிர்ச்சி அடைந்தா மாதிரி பாவனையுடனே “என்ன படிக்கிற ஆறாம் கிளாஸா?” என்று கேட்டார்.

“ஆமாம்”

“அது சரி, அப்போ நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்துவிட்டு வந்தால் மாடு தறேன் என்று சொன்னேள். இப்போ நான் ஆறாம் கிளாஸ் படிக்கிறேன்” என்று நிறுத்தினான். நாங்கள் பயந்து விட்டோம்.

பெரியவா தொடர்ந்தார், “மறுபடியும் நான் என்ன சொன்னேன்?”

“அஞ்சாம் கிளாஸ் படித்து விட்டு வந்தால்…”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சியா?”, பெரியவா கேட்டார்.

“எங்கம்மா எனக்கு டியூஷன் வெச்சு நாலாம் கிளாஸிலிருந்து ஆறாம் கிளாஸில் சேத்துட்டா, அப்போ நான் அஞ்சாம் கிளாஸ் படிச்சா மாதிரிதானே?”

“நீ அஞ்சாம் கிளாஸ் படிச்சுட்டு வந்தா நான் மாடு தரேன்னு சொன்னேன். நீ படிக்கலே. அதனாலே மாடு உம்மாச்சி கிட்டயே இருக்கும்” என்று கற்கண்டு பிரசாதம் குடுத்தார். மறுப்பு ஏதும் சொல்லாமல் “நீங்க சொல்வது சரி” என்று சங்கர் வீடு திரும்பினான்.

என்றோ நடக்க கூடிய ஒன்றை முன்னறிந்து கூறும் மஹா பெரியவா தீர்க்கதர்சி தானே?

SOURCE::::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/6719/thatha-maha-periva-give-cow#ixzz3TyPqGVp7

யார் சித்தர்…? …பித்தர்கள் நாம் …. நமக்கு என்ன புரியும் … ?

யார் ஸித்தர்?”

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
295603_479182172136829_1054166438_n.jpg
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பிற்பகல் இரண்டு மணி,கடுமையான வெய்யில் நேரம்.

வங்காளத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர் வந்தார்.

விழுப்புரம் அருகில் வெங்கடாத்ரி அகரம் என்ற

கிராமத்தில்,1948 சாதுர்மாஸ்யம். பாஷ்ய பாடம்

நடந்ததால்,பெரியவாளை உடனே தரிசிக்க

முடியவில்லை.

(ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் ஐம்பத்தெட்டாவது

பீடாதிபதியான ஸ்ரீ ஆத்மபோதேந்திர சரஸ்வதி

ஸ்வாமிகளின் அதிஷ்டானம் வெங்கடாத்ரி அகரம்

அருகில் வடவம்பலத்தில் இருப்பதாக, ஸ்ரீமடத்தின்

ஆவணங்களிலிருந்து தெரியவந்தது. ஆனால்,சரியான

இடம் தெரியவில்லை. மகாப்பெரியவாளின் முயற்சியால்

அந்த அதிஷ்டானம் கண்டுபிடிக்கப்பட்டது. 17-01-1927ல்

அந்த இடம், முறையான வழிபாட்டுக்கு உரியதாக

மந்திரச் சடங்குகள் மூலம் துவக்கி வைக்கப்பட்டது.)

“பெரியவா எங்கே?” என்று ஹிந்தியில், கொதிக்கும்

குரலில் கேட்டார், வங்கத்துச் சிங்கம்.

“சாயங்காலம் தரிசனம் பண்ணலாம்” என்றார்,

மடத்துச் சிப்பந்தி.

வந்தவர், துர்வாசரின் அவதாரம்!

“என்னது? சாயங்காலமா?… என்னை வரச்சொல்லிவிட்டு,

அவர் வெளியே போய்விட்டால் என்ன அர்த்தம்?..

அவர் வருகிறபோது வரட்டும்,நான் ஊருக்குப் போகிறேன்”

என்று பயங்கரமாக உறுமிவிட்டு, அருகிலிருந்த

சேர்ந்தனூர் என்னும் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி

நடக்கத் தொடங்கினார்.

மடத்துப் பணியாளருக்குக் கோபம் வந்தது.

“என்ன மிரட்டுகிறீரா?..உம்மை யார் வரச்சொன்னது”

சாமியார் வேஷம், வேறே! தாடி,ஜடாமுடி…!

இத்தனை கோபம் கூடாது….”

அவர் சொல்லிக்கொண்டிரூக்கும் போதே, பாராக்காரன்

ஓடி வந்தான்.

“சாமி,அங்கே பாருங்க, கரும்புத் தோட்டத்திலே நம்ம

எசமான் ஓடிப் போறாங்க”

சிஷ்யர் பெரியவாளை நோக்கி ஓடினார்.

பெரியவாளும் வங்காளச் சாமியாரும், தனியாக

சந்தித்து ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பின்னர், பெரியவாள் சிஷ்யரை அருகில் அழைத்து,

வங்காளப் பரதேசிக்கு, சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து

ரயிலேற்றி விடச்சொன்னார்கள்.

சீடர் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பினார்.

அவரைப் பார்த்ததும் பெரியவா சொன்னார்கள்.

“நான் காசியாத்திரை செய்துவிட்டு, வங்காளம்

மிதுனாப்பூர் வழியாக வந்தேன். அப்போது,இந்த ஸாது

சில தினங்கள் முகாமில் தங்கியிருந்தார். யோக புருஷர்;

ஸித்தர்.கோபத்தை மட்டும் ஜெயிக்க முடியவில்லை.

முகாமிலிருந்து விடை பெற்றுச் செல்லும்போது,

‘மறுபடி தரிசனம் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டார்.

பதினைந்து வருஷம் கழித்துத் தென்னிந்தியாவில்

கிடைக்கும்- என்றேன்.ராமபிரான் வருகையை

எதிர்பார்த்து பரதன் நாள்களை எண்ணிக்கொண்டிருந்த

மாதிரி, இவரும் நாள்களை எண்ணிக்கொண்டு,

இன்றைக்கு இங்கே இத்தனை மணிக்கு வந்திருக்கிறார்.

இவர்களில் யார் ஸித்தர்?

ஸித்தர்களில் பெரியவர்-சிறியவர் என்ற பாகுபாடு உண்டோ?

பித்தர்கள், நாம்! என்ன தீர்மானிக்க?

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8728/#ixzz3TTuUFVhE

” இப்போ போட்டோ எடுத்துக்கோ…” !!!

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)

”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”

பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

***********

வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.

பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”

அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).

பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.

மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.
SOURCE:::: http://www.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer#ixzz3T79zOjwl

“இடிக்கும் மேகமே இன்மழையும் பொழியும் ….”

1507603_10202994818654217_40352395530888678....jpg

“எங்கே, அந்த பெல்காம்….இருக்கானா?”

என்கிறது நெய்-மிளகாய்க் குரல்.

மிளகாயை விட்டு விட்டு!.

“இதோ இருக்கேன்” என்று தண்டம்

ஸமர்ப்பிக்கிறார் பெல்காம்…..

“நான் இந்த மஹாராஷ்ட்வாவிலே சுத்த

ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை

என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே

வர்ஷிப்பதாக உணர்ந்த பெல்காம்….தான் அடிக்கடி

பெரியவாள் தர்ஸனத்துக்கு வந்திருப்பதை இன்று

அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில்

உற்ற பெருமிதம். அவர் ‘இத்தனாம் தடவை’ என்று

சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை

வர முடியறது?”

“எனக்கு ரயில்வே உத்யோகமோல்லியோ?

‘பாஸ்’லே வரேன்.

“ஓஹோ! ஸரி! உன் பாஸை இங்கே வை”

என்று தமக்கு முன் தரையைத் தட்டிக்

காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின்

திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச்

அந்த ரயில்வே பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது.

பெரியவர் பாஸை உன்னிப்பாகக் கவனிக்கிறார். பேசத்

தொடங்குகிறார். நெய்யிலே மிளகாய் வறுபடுகிறது.

“பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே.

எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ்

இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு

உண்டுன்னு. இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக்

கணக்கா ஒரு கையெழுத்துக்கூட காணும்! நீ என்ன

பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக்

கொண்டு போய் ‘ஸரன்டர்’ பண்ணணும். இனிமேல் உன்

கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே

என்னைப் பாக்க வரணும்.!”

ஹர ஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு

அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச்

சேர்ந்த சிஷ்ய பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய்

காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன் வருகிறார்.

இதற்குப் பதினோராண்டுகளுக்கு முன் முனிவர்

ஸ்ரீ மடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து

பணக்காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை

என்று இவர் நன்கு அறிந்தவர்தான்.ஆயினும் பெரியவாளின்

திருவுளக்கருத்தின்படியே செலவழிக்கப்பட வேண்டுமென்று

அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே

இந்த ஆயிரத்தைச் செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே பெல்காம்…….?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப் பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார் பெரியவர்.

இடித்த மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டுபோவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் பெல்காம்…

பொறுப்புணர்ச்சியின் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்;

“அதெல்லாம் ஸரியில்லை. தொலைஞ்சு போச்சுன்னா

நீயோ அவனோ (கொடுத்தவரோ) ஜவாப் இல்லை.

நான்தான் ஜவாப். (கொடுத்த பிரமுகரைப் பார்த்து)

நீ இந்தத் தொகைக்கு அவன் பேரிலே ‘டிராஃப்ட்’

வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன,

ஸமயோசிதம் என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும்

இப்படி அற்புத முன்னுதாரணம் தருவதே முனிவரின்

இயல்பாயிருக்கிறது.

SOURCE::::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/8685/#ixzz3Sq964Nh5

” Offer Archana To SriKrishna Reciting SriKrishna Ashthothram …”


Source: Moments of a lifetime
Dr.R.Balakrishnan Nair, Nephrologist, S.K.S. Hospitals, Salem

This person is a doctor practicing at Salem. He had his medical studies in England and in the thirst of having a religious and spiritual life, he returned to India. He is highly devoted to Sri Guruvayurappan. His bhakti has been further strengthened with his constant devotion to Sri Krishna Premi Swamiji. He has been doing Srimad Bhagavata Parayanam daily.

Early one morning, when the doctor was fast asleep, he had a dream in which Sri Mahaperiyaval appeared, and asked the doctor to offer ‘archana’ to Sri Krishna, reciting Sri Krishna Ashtothram. The doctor and his wife searched for the book. Unable to locate the book, in some days, they forgot the matter.

Again in the early hours, in his deep sleep, the doctor had a dream of Sri Mahaperiyaval, who reminded him about the Sri Krishna Ashtothram. The doctor replied that he could not find the book although he remembered to have bought it a few years ago. Sri Acharyal told the doctor that a book titled ‘Bruhatstotra Ratnakaram’ was on top of the refrigerator, in their house in Salem. The ‘Sri Krishna Ashtothram’ could be found in it.

Immediately cutting short their planned stay at Alleppy, they returned to Salem to find the “Sri Krishna Ashtothram” book exactly on top of the fridge in their house. From that day onwards, the doctor has been offering tulasi archana to Sri Guruvaayurappan, while reciting Sri Krishna Ashtothram. The first archana is being offered to Sri Mahaperiyaval.

SOURCE:::: http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/5822/divine-guidance#ixzz3RlnXmEBT

Kashmir Willow Bat … An Important Player in Cricket World cup !!!

A look at Kashmiri willow bat factory, as sales boom during this World Cup season.