தற்கொலை செய்யும் கனவுகள் …
———————————–
ஆட்சியைப் பிடிப்பது கட்சியின் கனவு !
நல்ல ஆட்சியை அரியணை ஏற்றும்
கனவு நம் பாமர மனிதனுக்கு !
காணும் கனவு நனவாகும் என்னும்
நம்பிக்கை இருவருக்குமே !
கட்சி கண்ட கனவு நனவாகி காட்சி
மாறுது … ஆட்சியும் மாறுது !
சாமான்யன் அவன் கண்டான் கனவு
கிடைக்க வேண்டும் எனக்கு ஒரு
நல்ல மாற்றம் என்று !
ஆனால் அவனுக்கு கிடைத்தது நல்ல
மாற்றம் அல்ல …பெரும் ஏமாற்றம் !
அவன் கண்ட கனவு சிதைந்து மடியுது
அவன் கண் முன்னே …!
பக்குவமாய் செதுக்குவார் இந்த சிற்பி
ஒரு நல்ல ஆட்சி என்னும் சிலையை!
கண்டான் கனவு அந்த சாமான்யன் !
இன்று ,கண்ட கனவு எல்லாம் மடிவது
நிஜம் !… சிலைகள் உடைந்து கீழே
விழுவது நிஜம் ! புதிய சிலை ஒன்று
செதுக்க வேண்டாம் …இருக்கும் சிலையை
உடைக்க வேண்டுமா ?
உடைவது சிலைகள் மட்டும் அல்ல..நம்மில்
பலர் மனமும் சேர்ந்துதான் !
வாக்களித்த வாக்காளன் கண்ட கனவு
ஒரு இனிய கனவாகவே சாமான்யன் மனதின்
ஒரு ஓரத்தில் புதைந்து மறையும் நேரம்
என் மனதில் ஒரு கேள்வி !
சாமான்யன் அவன் கனவுக்கு மட்டும்
ஏன் இந்த அகால மரணம் ?
Natarajan
12th March 2018
Sairam, all havoc played by middleman. Believing middle is not lie on the real politicians. All the woes of affected citizens are on his own or somebody misleading.
True Sairam