இன்று ஒரு கவிதை

இப்போ என்ன அவசரம் எனக்கு !


கண்டவர் விண்டிலர் விண்டவர் 
கண்டிலர் 


விண்வெளி பயணம் செல்ல 
தேவை பல கோடி !


விண்வெளி விண்ணுலகு இல்லையே 
பிறகு ஏன் இத்தனை ஆரவாரம் ?


காலம் வரும் நேரம் ஒரு பைசா 
செலவு இல்லாமல் என்னை விண்ணுலகு 
கூட்டி செல்ல வருவான் காலன் !


அவன் வரும் வரை காத்திருப்பேன் 
நான் விண்ணுலகு காண ! 


இப்போ எனக்கு என்ன அவசரம் ?

கந்தசாமி நடராஜன் 
11/07/2021 

இன்று ஒரு கவிதை

ஊமை ஆனேன் நான் …..


நேற்று இருந்தவன் இன்று இல்லை 
இதுதானே  கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா 


என்ன உனக்கும் மேலா என்று !
சொன்னார் கடவுள் அவரவர் அவரவர் 
வேலையை செய்யும் நேரம் இது 


புரியவில்லை என்றேன் ! 
இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும் 
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம் 


பிறப்பது போல் உன்னைப்போல 
பல உயிர்கள் தினம் தினம் 
புதிதாய் பிறக்கிறதே ..அது 
புரியவில்லையா உனக்கு ?

தினம் தினம் புதிதாய் பிறப்பது நீயும்தான்
நான் இருக்கிறேன் உன்னிடம் என்று 
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் ! 


ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !

கந்தசாமி நடராஜன்

11/07/2021

இன்று ஒரு கவிதை

ஊமை ஆனேன் நான் ..

++++++++++++++++++++++


நேற்று இருந்தவன் இன்று இல்லை 
இதுதானே  கொரானா வின் நியதி !
கேட்டேன் கடவுளிடம் கொரானா 
என்ன உனக்கும் மேலா என்று !


சொன்னார் கடவுள் அவரவர் அவரவர் 
வேலையை செய்யும் நேரம் இது 
புரியவில்லை என்றேன் ! 


இறப்பும் பிறப்பும் சரி சமமாக நடக்கும் 
நேரம் இது என்றார் கடவுள் ! குழந்தைகள் பல தினம் தினம் 
பிறப்பது போல் உன்னைப்போல 
பல உயிர்கள் தினம் தினம் 
புதிதாய் பிறக்கிறதே ..அது 
புரியவில்லையா உனக்கு 


நான் இருக்கிறேன் உன்னிடம் என்று 
தெரியவில்லையா ?
கேட்டார் கடவுள் ! 
ஊமை ஆனேன் நான் இறைவன் முன் !

கந்தசாமி நடராஜன்

01/07/2021