வாரம் ஒரு கவிதை ….” பிரியும் தருணத்தில் ” …

பிரியும் தருணத்தில் …
——————-
இவர் போல வேறு யாரும் இருக்க முடியாது
இனிமேலும் இவர் போல வேறு ஒருவர்
பணி ஆற்ற முடியாது இந்த அலுவலகத்தில் !
என் ஒய்வு நாள் பிரிவு  உபசார விழாவில்
நான் கேட்கும் நல்ல வார்த்தைகள் இவை !
என் வாழ்க்கையில் பாதி நாள் இந்த
அலுவலகப் பணியில் கழித்து விட்ட
நானும் சொல்கிறேன் ” உங்களையும்
இந்த அலுவலகத்தையும் பிரிய மனமில்லை
எனக்கு ” என்று !
பணியில் இருந்த நாளில் ” என்ன வேலை
இது …எப்போது விடுதலை நமக்கு  இந்த
பணியில் இருந்து ” என்ற எண்ணம் தான்
என் மனதில்  உண்மையில் !
நினைத்துப் பார்க்கிறேன் நான் .. பணியில்
இருந்த நாளில் பரஸ்பரம் இந்த ஒரு பரிவும்
பாசமும் உடன் உழைத்த நண்பர்களிடம் நேசமும்
இருந்ததா இல்லையா என்னிடம் ?
பிரியும் தருணத்தில் மட்டும் இந்த பாசமும் நேசமும்
போட்டி போட்டுக் கொண்டு ஒரு ஓட்டப் பந்தயம்
நடத்திக் காட்டுதே என் கண் முன்னே ! ஒன்றும்
புரியவில்லை எனக்கு …!
ஒருவரை ஒருவர் பிரியும் தருணத்தில்
மட்டும் பாச மழை பொழியாமல் ஒருவர்   வாழ்வின்
எந்த தருணத்திலும் பாசமும் நேசமும் அவர்
இரண்டு கண்களாக இருக்க வேண்டும்
என்னும் ஒரு முக்கிய செய்தி கிடைக்குதா
எனக்கு என் அலுவலை பிரியும் தருணத்தில் ?
K.natarajan
3rd july 2018

Leave a comment