பத்ம வியூகம்
————
பத்ம வியூகம் …சக்ர வியூகம் …ஒரு
போர் வியூகம் …அர்ஜுனன் அவன்
பிள்ளை அபிமன்யுவை போரில் இழந்தது இந்த
வியூகத்தில்தான் !
எளிதாக அரண் உள்ளே சென்ற பிள்ளை அபிமன்யுவுக்கு
அரணை விட்டு வெளியில் வர தெரியவில்லை வழி !
அன்று பத்ம வியூகம் விழுங்கியது ஒரு அபிமன்யுவைதான் !
ஆனால் இன்று வங்கி கடன் , கடன் அட்டை என்னும் சக்கர
வியூகத்தில் மயங்கி தன் நிலை தடுமாறி கடனில்
சிக்கி மீண்டு வர வழி தெரியாமல் தவிக்கும் இன்றைய
இளைய தலை முறையில் எத்தனை எத்தனை அபிமன்யூக்கள் ?
அன்று கர்ணன் ஒருவனுக்குத்தான் தெரியும்
பத்மவியூக அரணில் அவன் எதிரியை சிக்க வைக்க !
அதனால் மடிந்தது ஒரே ஒரு அபிமன்யுதான் !
ஆனால் இன்று வங்கிகள் அத்தனைக்கும் தெரியும்
பத்மவியூக யுக்தி என்ன என்று ! அதன் சக்தி என்ன என்று !
வியூகத்தில் சிக்கி சுழலாமல் ,வங்கி கடன் என்னும்
என்னும் மாய வலையில் சிக்காமல், வரவுக்கு மேல்
செலவு நான் செய்ய மாட்டேன் என்னும் அரணை
நம் பிள்ளைகள் தம்மை சுற்றி அமைத்து விட்டால்
இந்த கால பத்மவியூகம் பலி வாங்க முடியாதே
ஒரு அபிமன்யுவைக்கக்கூட !
ஒரு அபிமன்யுவை பலி வாங்கியது அந்த கால
பத்ம வியூகமாகவே இருக்கட்டும் !
இந்த கால பத்ம வியூகத்தை பழிக்குப்
பழி வாங்கும் சக்தி இன்று உங்கள் கையில்
அபிமன்யூக்களே ! சிந்தித்து செயல்
படுங்கள் பிள்ளைகளே !
Natarajan
31st August 2018