சொற்கள்
———
எண்ணங்கள் உருமாறும் எழுத்தாக!
எழுத்து வடிவெடுக்கும் ஒரு கதையாக ,
ஒரு கவிதையாக ,ஒரு புத்தகமாக ,
கற்பனை கல்லில் செதுக்கிய
ஒரு நல்ல சிற்பமாக !
சிற்பமே சொல்லும், அதை வடித்த சிற்பி யார்
என்று !
சொற்களும் எண்ணத்தின் சிதறல்தான்
ஆனால் நம்மில் பலர் சிதறும் சொற்கள்
கற்களாக மாறி காயப்படுத்துதே அடுத்தவர்
உள்ளத்தை !
கற்றுக் கொள்வோம் நாம் ஒரு நல்ல பாடம்.. நம்
சொற்கள் வடிக்கத் தேவையில்லை ஒரு சிற்பம் !
கற்கள் ஆக மட்டும் உருமாற வேண்டாம்
என்றும் எப்போதும் நாம் சொல்லும் சொற்கள் !
K.Natarajan in http://www.dinamani.com dated 21/09/2018