வாரம் ஒரு கவிதை ….” உன் விழிகளில் …”

உன் விழிகளில் …
==================
வாய் மொழி சொல்லாத வார்த்தைகள் மலரும்
உன் விழிகளில்
நான் சிரித்தால் ஒரு புன்சிரிப்பு தெரியும்
உன் விழிகளில்
நான் அழுதால் நீர் வழியும் உன் விழிகளில்
பசிக்கிறது எனக்கு …புசிக்க வேண்டும் நான்
என்று உனக்கு புரிந்தவுடன் பாசமுடன் நேசமுடன்
அமுது கொடுக்கும் பரிவு தெரியும் உன் விழிகளில்
எனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் நான் எப்போதும்
உனக்கு சேய் என்னும் பாசம் தெரியும் உன் விழியில்
அம்மா …உன் விழிகள் என்றும் என் முகம் பார்க்கும்
கண்ணாடி …! என் எண்ண ஓட்டம் என்ன என்று
அழகாக கணிக்கும் கணினியும் உன் விழிகளே !
அம்மா நீ மறைந்தாலும் உன் விழிகள் இருக்குது
உயிருடன் ! உன் விழி வழி, பார்க்கிறார் இன்றும்
ஒருவர் இந்த உலகை ! வழி மேல் விழி வைத்து
தேடுகிறேன் நானும் உயிருடன் இருக்கும் உன்
விழிகளை தினமும் !
ஒரு நாள் பார்ப்பேன் உன் விழிகளை மீண்டும்
நான் அம்மா !  உன் விழிகள் இருக்கும் இடம்
வேறாக இருந்தாலும் நான் இருப்பேன் நிச்சயம்
உன் விழிகளில் !
விழிமொழி மட்டுமே தேவை எனக்கு உன் விழிகளில்
மீண்டும் என் முகம் பார்த்து உன்னுடன் பேச !
Natarajan.K
07/01/2019

Leave a comment