யாருக்கு என் வாக்கு ?
=====================
யாருக்கு என் வாக்கு ? குழப்பத்தில் நான் !
இந்த கட்சியுடன் அந்த கட்சி கூட்டணி
அந்த கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி !
நேற்று வரை இரண்டு கட்சியும் எதிர் எதிர்
திசையில் …இன்று தேர்தல் கூட்டணி என்னும்
போர்வையில் ஒரே அணியில் !
தாக்கு தாக்கு என்று தாக்கிக் கொண்டவர் எல்லாம்
வாக்கு வங்கியில் வேட்டையாட நிஜம் மறைத்து
ஒரே மேடையில் நின்று வாக்கு கேக்கும் அவலம் இன்று !
இது என்ன கூட்டணியா ….இல்லை குழப்ப
அணியா ? இல்லை நம்மை எல்லாம்
குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்
கூட்டமா ?
இந்த குழப்பம் எனக்கு மட்டுமா …இல்லை
உங்கள் எல்லோருக்குமா ? யோசிப்போம்
பொறு”மை” யாக …நம் விரலில் வைக்கும்
“மை ” வெறும் “மை” அல்ல ! அது சொல்லும்
உண்”மை ” ! சேர்க்கும் பெரு”மை”… நம்
ஜனநாயகத் திருவிழாவுக்கு !
காத்திருக்கட்டும் குழப்பவாதிகள் விடை தெரியும்
வரை… அவர் கண் இ”மை”க்காமல் !
K. நடராஜன்
April 1 2019
People should exhibit their choice in a clear tone and make the Politicians understand the Power of Electorate .
Excellent kavithai for today’s situation. In the name of alliance the political parties of different personal ambition are fooling the people talking nonsense in the name of Poole agenda. People should judge each candidate’s background and elect as their representative.
Thank you