கண்ணீர் மாறட்டும் தண்ணீராக …
++++++++++++++++++++++++++++++++
தண்ணீர் விட்டு வளர்த்தேன் என் வீட்டு
தோட்ட செடிகளை ..என் வீட்டுக் குழந்தையை
சோறு ஊட்டி வளர்ப்பது போல !
வாடி நிக்குது என் வீட்டு செடிகள் இன்று!
தேடி தவிக்குது தண்ணீர் தண்ணீர் என்று !
வாடிய செடி கொடி பார்த்து கண்ணீர்
வடிக்கிறேன் நான் ! தண்ணீர் கொடுக்க
முடியவில்லையே என் ” வீட்டுக் குழந்தைக்கு ” !
தண்ணீர் தண்ணீர் என்று நானே அலைகிறேன்
இன்று ! ஆனால் என் தாகம் தணிக்காதே என்
கண்ணின் நீர் ! வாடும் என் வீட்டு செடி கொடியாவது
பசியாறட்டும் என் கண்ணீரால் !!! மாற வேண்டும் என்
கண்ணீர் தண்ணீராக … வாடிய என் செடி துளிர்க்க
வேண்டும் மீண்டும் … என் கண்ணின்
நீரால் என் கண் முன்னே !
K .நடராஜன்
19/06/2019