சிரிப்பு 2
++++++++
++++++++
தினமும் பார்க்கிறேன் என் குடியிருப்பில்
வசிக்கும் அவரை நான் …காலை
மாலை நடை பயிலும் நேரம் !
சிரித்து வணக்கம் சொல்லுவேன் அவருக்கு
நான் ! பதிலுக்கு வணக்கம் இல்லை …
முகத்தில் சிரிப்பு கூட இருக்காது !
கடுவன் பூனை என்று அவருக்கு பெயராம்
எங்கள் குடியிருப்பில் ! ஒரு குழந்தையைப்
பார்த்தாலும் முகத்தில் சிரிப்பு வராது அவருக்கு !
சிரிக்கவே காசு கொடுக்க வேண்டும் போல
அவருக்கு…நினைத்துக் கொள்வேன் !
ஒரு நாள் அவரைக் கேட்டேன் ‘அய்யா
உங்கள் பணி என்ன , எங்கே “? என்று !
நான் ஒரு ” நகைச்சுவைப் பயிற்சியாளர் ” !
சொன்னார் அவர் !
பொத்துக்கொண்டு வந்தது சிரிப்பு எனக்கு !
அவர் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பே
இல்லை அப்போதும் !
Kandasami Natarajan
05/09/2019