புத்தரின் புன்னகை
++++++++++++++++++
மாற்றம் ஒன்றே நிரந்தரம் …வாழ்வில்
மற்றவை நிரந்தரம் அல்ல !
விதை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !
அன்றே சொன்னார் புத்தர் ! இன்னும்
அதன் அர்த்தம் தெரியவில்லையே நமக்கு !
மோனோலிசாவின் புன்னகை பார்க்க
ஓடும் நமக்கு புத்தர் ஏன் சிரிக்கிறார்
நம்மைப் பார்த்து என்று இன்னும்
புரியவில்லையே !
புத்தரின் சிரிப்பு வெறும் புன்சிரிப்பு
அல்ல …பொருள் பொதிந்த பொன்
சிரிப்பு !
கந்தசாமி நடராஜன்
in http://www.dinamani.com dated 25/09/2019