சாம்பலாய் முடியும் உடல்
++++++++++++++++++++++++++
ஆஸ்தி எத்தனை சேர்த்தாலும் மனிதனின்
அஸ்தி அடக்கம் ஒரு சிறு மண் குடுவையிலே !
அதற்குள் எத்தனை எத்தனை குஸ்தி
உறவுக்குள் இது என் ஆஸ்தி ,உன் ஆஸ்தி
என்று !
ஆட்டம் முடிந்து ஆறு அடி நிலத்தில்
அடக்கம் ….இல்லை அரையடி மண் குடுவையில்
உடலின் சாம்பல் அடக்கம் !
இந்த வாழ்வின் முடிவு தெரிந்தும், முடிவும்
சாம்பலும் அடுத்தவருக்கே …எனக்கு இல்லை
எப்போதும் என்னும் மாயையில் வலம் வரும்
மனிதர் பலர் உண்டே இங்கே !
மடிந்த பின் மண்ணோடு மண்ணாகி வெறும்
சாம்பலாக மாறிய பின்னர் மீண்டும்
உயிர்த்து எழ மனிதன் என்ன பீனிக்ஸ் பறவையா ?
கந்தசாமி நடராஜன் in http://www.dinamani.com dated 09/10/2019
very well touched the heart people are like that
Thanks Sir
Very true but nobody cares
Thanks for your feedback and comment Madam