வாரம் ஒரு கவிதை

அடையாளம் காட்டுமா இந்த அட்டை ?

எத்தனை எத்தனை அடையாள அட்டை 
நீயும் நானும் இந்த மண்ணில் பிறந்து 
வாழ்கிறோம் என்னும் உண்மையை 
உறுதி செய்ய ! 

எங்கு சென்றாலும் யார் கேட்டாலும் 
காண்பிக்க வேண்டும் ஒரு அட்டை !
நம் அம்மா அப்பா தவிர எல்லோரும் 
கேட்கிறார் நம்முடைய  அடையாளம் 
என்ன என்று !

ஒரு மனிதனை அடையாளம் காட்டும் 
சிறு அட்டை அடையாளம் காட்டுமா 
அந்த மனிதன்  மனித நேயம் 
உள்ளவனா இல்லையா என்று ? 

கந்தசாமி நடராஜன் 
18/12/2020

Leave a comment