அந்தி மாலை பொழுது

” தாவு அலைகடல் உதித்த  இளங்கதிரோன்  முகில் 

மேவி வரும் மலையுநூடு மறைந்து விட –

மன்னனவன்  பிரிகின்ற துயரத்தால் மங்கை கமல (ம்)

முகம்  கூம்பி கடன் முடித்த கதிரவனுக்கு விடை   கொடுக்க 

உடன் வந்து பணியேற்கும் வெண்  மதியமதை –

குவிந்திருந்த குமுத  மலர் அமுதமது கண்டாற்போல்

பாவித்து தன் முக மலர்ந்து புன்னகைக்க

வெண்ணிலவு  தண்ணென்று காய்ந்ததுவே !!!!!! ”

 

நடராசன்

Leave a comment