FACE BOOK….

நோட் புக் தெரியும் ..பேங்க் பாஸ் புக் தெரியும் …அது என்ன FACEBOOK ??? … புது புக் ?

கேட்டேன் நான் என் பேத்தியிடம் !!! பேஸ் புக் தெரியாதா தாத்தா ? என்ன தாத்தா நீங்க!

பட்டென கேட்டது என் மூன்று வயது பேத்தி… சரி சரி உங்க போட்டோ ஒன்னு கொடுங்க

தாத்தா…. நான் என் பேஸ் புக்கில் உங்களை என் ப்ரென்ட் ஆக சேர்க்கிறேன் …இது என் பேத்தி !!!!

உடன் தேடி எடுத்து கொடுத்தேன் என் பென்ஷன் போட்டோ காப்பி ஒன்று…

ஐயோ தாத்தா !!!! இது என்ன முகம் என்று நான் பேஸ் புக்கில் போட!!!!… இது வேண்டாம் எனக்கு …

ஐயா இது என் பேத்தியின் தீர்ப்பு !!!! இருக்கும் முகம் தானே போட்டோவில் தெரியும் !!!!

பேஸ் புக்குக்காக நான் தர முடியுமா ஒரு புது முகம் !!!!????

இது எப்படி என் பேத்திக்கு புரியும் !!!!!!!

One thought on “FACE BOOK….

Leave a comment