உழைப்பாளர் தினம்

FIRST DAY OF MAY IS OBSERVED A S LABOR DAY EVERY YAER… WE MUST KNOW THE BACKGROUND FOR THIS DAY…I READ IT IN A SITE … I AM SHARING IT WITH YOU ALL….

Natarajan

*தொழிலாளர் தினம்! (Labor Day ) உழைப்பாளர் தினம்!*
*உலகமெங்கும் ” மே ” மாதத்தில் தொழிலாளர் தினம் *
*கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்… கனடாவில் மட்டும் *
*செப்டெம்பர் மாதத்தில்….என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?! *
**
*அவர்களுக்காக
தமிழ் உலகம் மூலம் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்…..!*
**
*இன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது தனியார் தொழில் *
*நிறுவனமாகட்டும்காலையில் 8 மணிக்கு அல்லது 9மணிக்கு வேலைக்குப் *
*போனால் எட்டு மணி நேர வேலையை( கொட்டாவி விடுறது… குட்டித்தூக்கம் *
*போடுறது… சாப்பாடு…. டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை… அலுவலக நேரத்தில் *
*ம்ம்ம்… அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட்
கெடச்சதா”, அமெரிக்காவில‌ எலெக்ச‌ன் என்னாச்சு?
த‌மிழ‌க‌ சினிமாவின் 75ம் ஆண்டுவிழாவுக்கு
ந‌டிக‌ர் ச‌ங்க‌ம் க‌ருணாநிதியையும் செய‌ல‌லிதாவையும்
அழைக்க‌ப் போகிறார்க‌ளாமே….”…. என்ற அலசல் நேரம் உட்பட )
ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.*
**
*மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த ·பைலை கொஞ்சம்
பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம்
நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக்
கேட்டால் தகராறு… யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம்
கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது
உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.*
**
*நூறு… நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக
வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து
ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு
உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும்
சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை
அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு,
பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம்.*
**
*அன்று…1863களில்…*
**
*அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன்
கைகளில் நாளிதழ்களைச் சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப்
பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசி நாளிதழ் விற்றானதும்
தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலை
ஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க
ஷூவுக்கு கொஞ்சம் பாலீஷ் போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா…”
என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷூ பாலீஷ் வேலை நடக்கும். ஒருவாறு
இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ள
நாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி
அங்குள்ள பொருட்கள் மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி
வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்து
மணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால்
ஒரு நிம்மதிப் பெருமூச்சு கூட விடமுடியாது.*
**
*ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை
எடுத்துக்கொண்டு அந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத்
தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில்
ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும்
மதியத்துக்குமான வயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும்
அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதர சகோதரிகளுக்காக கால்களில்
சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர்
பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .*
**
*டிஸ்மிஸ்…*
**
*19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து
வந்தவர்கள் நியூயார்க் நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள்
நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம்
என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின்
கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே
வசிக்கக்கூடிய ஒரு வீட்டில் நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய்
மாறியிருந்தனர்.*
*இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்தது போல விடிந்தும் விடியாத…
புலர்ந்தும்
புலராத வேளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின்ஆயிரக்கணக்கான
குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடித் தெருக்களில் வலம் வந்தனர்.*
*இவர்களுக்குகிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம்
மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்து வந்த ஆண்களும் பெண்களும்
குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்று
வேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். *
**
*இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடமிகக்குறைந்த நேரமே கொடுக்கப்பட்டது. *
*வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் *
*சரியான நேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால்
“டிஸ்மிஸ்” தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்கு
இரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும்
என்பது போல வேலைஇல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள்
இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.*
**
*தொழிற்சங்கம்…*
**
*பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச்
சேர்ந்தான். இது அவன் பார்த்தமற்ற வேலைகளைவிடப் பரவாயில்லா
மலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலை
பார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில்
பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனை குறித்த வகுப்புகளுக்கும்
கூட்டங்களுக்கும் சென்றான்.*
**
*இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின்
வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக்
குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம் வேலை பார்ப்பதாலும்
தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில்
களைப்படந்து போய் இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான்.
இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள்
தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர்
கவனிக்கத் தவறவில்லை. *
**
*தொழிலாளர்களின் வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய *
*1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலைமுடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் *
*ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காகஒரு தொழிற் சங்கம் வேண்டும் என்று பேசிய *
*அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க் நகரம்
*
*கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர்.*
*நீண்ட வேலை நேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக்
கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.*
*தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இஇந்தப்
பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளைப்
பேணிக்காக்க ஆங்காங்கே தொழிர்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும்
தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர்
பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இஇருந்தது.*
*வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத்
தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம் கோரிக்கைகளை பீட்டர்
முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக ” பொது மக்களின்
அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் ” என்ற முத்திரை குத்தப்பட்டார்.
பீட்டர்
பார்த்த வேலையும் சில விஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று
படுத்தி இஇயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடு ஊர் ஊராக
பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம்
துவங்கக் கோரினார்.*
**
*1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State )
உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ள தச்சுத் தொழிலாளர்களை
ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில்
ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர்
அமைப்பை உருவாக்கினார். இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத்
தேர்ந்தெடுத்தனர்.*
**
*எட்டு மணி நேர வேலை…*
**
*இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர்இஇயக்கத்தைக் கண்ட
அமெரிக்க மாநிலங்களில் உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம்
பிறந்தது. காட்டுதீ போல பரவிய இஇந்த உற்சாகம் ஆலைத் தொழிலாளர்கள்,
பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காங்கே
தொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர
வேலை, வேலைப் பாதுகாப்பு போன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில்
ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடு கூட்டுக் கூட்டங்கள்
நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கான
விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில்
தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார். இஇந்த நாள் அமெரிக்கச் சுதந்திர
தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும் இடையில் அமையவேண்டுமென்றும்
குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.*
**
*1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம்
பேர்கள் அடங்கிய
தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில்
” LABOR CREATS ALL WEALTH ” என்றும் “EIGHT HOURS FOR WORK, EIGHT HOURS
FOR REST, EIGHT HOURS FOR RECREATION !” என்ற வாசகங்கள் அமெரிக்கத்
தொழிலாளர்களை
வசீகரிக்கும் மந்திரச் சொல்லானது.*
**
*பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டு
மகிழ்ந்தனர். அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச
பூமியாக்கியது. இந்தவெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள்
மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால் என்ன? நமக்கு நாமே விடுமுறை
எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்று
ஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து
வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம் கொண்டாடினர்.*
**
*1894 ல்…..*
**
*அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல
அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது. 1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே
அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளை
அரசு விடுமுறை நாளாக அறிவித்தது. இன்றைக்கு அமெரிக்கா, கனடா
நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக்
கொண்டாடுகின்றனர். பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள்
கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் தொழிலாளர்கள் கூட்டமாக
ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும்
வருடந்தோறும் நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. *
**
*அரசியல்வாதிகள்கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி
வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.*
*பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின்
கடைசி நீண்ட விடுமுறை நாளாகக் கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற
ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்
கடலில் நீந்துவது வழக்கம். *
O0Oசிகாகோ கலகம்O0O
*இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் *
*பகுதியில் 1886ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் “எட்டு மணி நேர வேலை” *
*என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் *
*கூட்டமைப்பு “மே” மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்தது.
சிகாகோவின் அந் நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி *
*அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் *
*நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை *
*விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் *
*கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை *
*வீச…… தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த *
*ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் *
*குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான *
*காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்ப‌ட்ட‌ *
*தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர். *
**
*கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய்*
*அன்றைய தினம் அமைந்தது….தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம்*
*எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கன் கொண்டு பார்க்க இயலும்.
*
*காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க *
*தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் *
*கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. *
*இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். *
*அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் *
*தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு.தொழிலாளர்கள் *
*தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.*
*பேரியக்கம்…
சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் *
*கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி
*
*மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு *
*சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து *
*கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய *
*நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர்.
*
*உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர *
*சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.
அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக *
*நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய்
குறிப்பிடத்தக்கது. *
**
கனவும் நனவும்….
தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில்
“எட்டு மணி நேர வேலை” என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன.
தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு மே மாதம்
1ம்தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம்
படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.
*
1889ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர்.
உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக
அந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல. உழைப்பாளிகள் ஒன்று படவும்
அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை
உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர்.
1891ம் ஆண்டு மே1ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும்
அயர்லாந்தில் “மே” தினத்தைக் கொண்டாடினர். *
*
சைனாவில் 1920 லும், இந்தியாவில் 1927லும் (இந்தியாவில் கல்கத்தா,
சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் “மே”
தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905ம் வருடத்திலிருந்து
வருடம்தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர்
தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது.
கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே
தொழிலாளர்தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.
என்ன ஒரு வருத்தமான செய்தி என்றால், அன்று
உண்மையிலேயே உழைப்பாளர்களால் கொண்டாடப்பட்டது!
இன்றைக்கு உழைப்பாளர்கள் கட்சி என்ற அடையாளத்துக்குள்
மறைந்து சடங்குத்தனமாக, சம்பிரதாயமாக நடப்பதுதான்!
தமிழகத்தில்…..
தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம்
உடமைஎன்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு
வாழ்ந்த சிங்காரவேலர் “மே” தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும்
1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின்
இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்தவரலாறும் தொழிலாளர்கள்
மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.*
*1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற “கோரல் மில்’ தொழிலாளர்களின் *
*போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று “மெட்ராஸ் லேபர் யூனியன்’
*
*என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு *
*முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும். *
*
இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர்
ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர்
தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா
தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.
1889லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை
இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள்
தெரிவிக்கிறது.சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக
கொண்டாடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளது.
போராடுவோம், போராடுவோம்…வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!! இந்தப்படை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை
கண்டு அஞ்சோம்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! போன்ற
சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம்
செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது!
*
*உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு *
*மத்திய அரசு 2006 மார்ச் திங்கள் 2ம் நாளன்று அஞ்சல்தலை *
*வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால் தான் இந்த உலகம் இன்னும் *
*கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது, என்றால் அது மிகையில்லை!!! *
*ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!*
*தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் *
*பெற ஒரு நாள் விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் *
*அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர், சிங்காரவேலர் போன்றவர்களை
இந்
நாளில் *
*நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை…. இல்லையா?*

3 thoughts on “உழைப்பாளர் தினம்

  1. A.V.Ramanathan's avatar A.V.Ramanathan April 30, 2012 / 1:46 pm

    இது மே தின சரித்திரத்தை விரிவாக எடுத்துரைக்கும் அருமையான கட்டுரை! ஆனால் பன்னாட்டு நிருவன வேலையில்,போட்டி போடும் இன்று பல ஊழியர் பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

  2. Natarajan's avatar natarajan1950 April 30, 2012 / 4:26 pm

    பன்னாட்டு நிறுவன ஊழியர் பற்றி சொன்னது மிகவும் சரி …கவனிக்கப்பட வேண்டிய ஒன்று

  3. C Sivaprabhu's avatar C Sivaprabhu May 1, 2012 / 6:43 am

    i saw a few auto drivers celebrating the May day this morning.They are not only the drivers,they are also the owners of their respective autorikshaws.

Leave a comment