அம்மா என்றால் அன்பு…. அன்பு என்றால் அம்மா …
அம்மா என்ற சொல்லே ஒரு மந்திர மல்லவா !!!!!!
எந்திர மயமான இந்த உலகிலும் தானே ஒரு
எந்திரமாக என்றும் தன் குடும்பத்தில்
சுழலும் அம்மாவுக்கு முன்னால் மற்ற எந்திரமெல்லாம்
சும்மா!!!!!
ஊருக்கு ராஜாவானாலும் அம்மாவுக்கு அவன் ஒரு குழந்தைதானே !!!! -அவன்
பேருக்கு பின்னால் பல பட்டங்கள் இருந்தாலும் அவன் விட்ட முதல்
பட்டம் அவன் அம்மா செஞ்சு கொடுத்த காகித பட்டம் தானே !!!!!!!!!!!!!!
சட்டம் போட்டு அளந்து விலைக்கு வாங்க முடியுமா ஒரு அம்மாவின் அன்பை ?
அறுபது வயது ஆனாலும் ஆயிரம் பிறை கண்ட அம்மாவுக்கு அவனும் ஒரு
சிறு குழந்தைதானே !!!!
அம்மா என்ற உறவு விண்ணில் மறையும் நேரத்தில் அறுபது வயது
பிள்ளையும் தன் கண்ணில் நீர் மல்க நினைப்பது அம்மாவின் அன்பு
அரவணைப்பை …..அளவில்லா பாசத்தை ….ஒரு விலை இல்லா நேசத்தை …
எத்தனை இருந்தாலும் யாரால் நிரப்ப முடியும் ஒரு அம்மாவின் இடத்தை ?
அம்மா அம்மா என்று அவன் பிள்ளை தன் அம்மாவை கூப்பிட்டால் …
அம்மாவின் அறுபது வயது பிள்ளை…. எங்கே எங்கே என்று தன்
அம்மாவை அல்லவா தேடுகிறான் !!!!!!!
நடராசன் ..