MY friend shri. Vijayaraghava iyengar has shared the exclusive SUNDARA KANDAM as appearing in NAALAYIRA DIVYA PRABANDHAM,,……… The divine one is shared with you all for the benefit of all of you.
Natarajan.
அன்பு நடராஜனுக்கு,
நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி இராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தர காண்டம் உள்ளது:
சுந்தர காண்டம்
சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக் கடந்து ஏறி,
மும்மதிள் நீள் இலங்கை புக்கு,
கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள் வைதேகிதனைக் கண்டு,
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு அருளாய்:
அயோத்தி தனில் ஓர் இடவகையில் எல்லியம்போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய,
“குலக்குமரா! காடுறைய போ!” என்று விடை கொடுப்ப,
இலக்குமணன் தன்னொடும் அங்கு எகியதும்,
கங்கைதனில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்,
சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி பணிந்ததுவும்,
சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும் திரிந்தோடி,
“வித்தகனே! இராமா! ஒ! நின் அபயம்” என்ன,
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்,
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட,
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக,
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்,
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்,
“ஈது அவன் கை மோதிரமே!” என்று,
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு,
“அனுமான்! அடையாளம் ஒக்கும்” என்று,
உச்சி மேல் வைத்து உகக்க:
திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு,
அன்பினால் அயோத்தியர் கோன் தளிர் புரையும்,
அடி இணை பணிய
என்று பாசுரங்களில் உள்ள வரிகளையே கொண்டு இராமாயணம் முழுமையாக அளித்து ஆழ்வார்களின் அருளோடு அந்த பரந்தாமன் அடியினை பணிய அருளிய அவர்தம் அருளினை என் சொல்லி அடியேன் இயம்புவது?
எழுத வாய்ப்பு அளித்த நடராஜனுக்கு நன்றி!
அடியேன்,
வடகரை நா.விஜயராகவ ஐயங்கார்