குடும்ப வாழ்க்கை மிக உயர்ந்தது ..கிர்ஹஸ்த தர்மம் என்று சாஸ்தரங்கள் அதை சிறப்பாக சொல்கின்றன .சரி : குடும்பம்னா என்ன ? அதுலே யார் யாரெல்லாம் அடக்கம் ? அப்பா , அம்மா , சகோதர சகோதரிகள் , மனைவி , குழந்தைகள் , நண்பர்கள், எல்லோரும் அதில் சேர்ந்தவர்கள்தான் …அப்படி அனைவரையும் அரவணைச்சு போறதுதான் உயர்வான தர்மம் !!! உலக இயக்கத்துக்கே இதுதான் அடிப்படை ….இது பொதுவான குடும்பத்துக்கு !!!!!!
அதே சமயம் , கல்யாணம் ஆகவில்லை என்றாலும் , ஒரு ஒரு தனி மனிதனும் கூட ஒரு குடும்பம்தான் !!!!!!!!!!!!!!!..அந்த குடும்பத்திலும் அம்மா , அப்பா, அண்ணன், குழந்தை , நண்பன் ,மனைவிஎல்லாம் உண்டு.!!!!!!!!!!!!! அதை புரிந்துகொண்டால் இந்த குடும்ப வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கலாம் …
இந்த ஸ்லோகம் அதைத்தான் சொல்கிறது !!!!!!
” சத்யம் மாதா பிதா ஞானம் தர்மோ ப்ராதா தயா சகா ஷாந்தி பத்தினி க்ஷமா புத்திர
ஷடதே ம ம பாந்தவா : ”
எல்லோருக்கும் உண்டான குடும்பம் இது,. இந்த குடும்பத்தில் “உண்மைதான் ” அம்மா …..”ஞானம்தான் ” அப்பா …..
“தர்மம்” உடன்பிறந்தவர்கள் !!!!!…..” கருணை ” என்னும் குணம் நண்பன் !!!!!!……”சாந்தம் ” என்பது மனைவி.!!!!!!…”மன்னித்தல் அல்லது மன்னிக்கும் மனப்பக்குவம்” குழந்தைகள் !!!!!!!!!!!!!!!. இவர்கள் எல்லோரும் உறவுகள் …இந்த உறவுகளை நன்றாக வளர்த்துக்கொண்டால் , குடும்ப வாழ்க்கை இன்னும் இனிமையாக இருக்கும் ..
இல்லறம் நல்லறமாக அமையும் …எல்லோருக்கும் நன்மை பயக்கும் …………..
SOURCE: “DEEPAM” …Tamil BI-MONTHLY… KALKI PUBLICATIONS… JUNE 20 2012 ISSUE.
Natarajan