படித்ததில் பிடித்தது !!! அப்பா ……

SOURCE :::SRI KRISHNA SWEETS CALENDER …CHENNAI…BESIDES SHOWING DATES AND DAYS , SKS CALENDER PROVIDES THIS KIND OF “THOUGHT FOR THE DAY” IN THEIR DAILY SHEET CALENDER….A THOUGHTFUL AND NOVEL SERVICE BY SKS… I READ IT TODAY …17 JUNE 2012.. I AM SHARING IT WITH YOU THRO MY SITE …..

Natarajan

அப்பாவின் வெது வெதுப்பான உள்ளங்கையில் , நம் பிஞ்சு விரல்களை ஒப்படைத்துவிட்டு , சாலையை கடந்தபடி வேடிக்கை பார்த்தோம் …விளையாடினோம் …விரும்பியதை சாப்பிட்டோம் !!!! அப்பா என்பவர் இன்னொரு அம்மா !!!!

* மகனுக்கு தந்தைதான் முதல் ஆசிரியன், நாயகன் , எல்லாம்!!!! வளர்ந்த பிறகு , மகன் தந்தையின் இனிய தோழன் !

* மகளுக்கு தந்தை ஒரு நண்பன்.. வளரும்போது தந்தையே தாய் ….வளர்ந்தபிறகு, மகள் தந்தைக்கு தாய் !!!!

*குடும்பம் என்னும் இசையின் சுருதி தாய்…லயம் தந்தை….ராகங்கள் குழந்தைகள் !!!!

* நமது கனவுகளை நிஜமாக்கி தருபவன் தந்தை ….நிறைவேறாத தனது கனவுகளை நம் மூலம் நிஜமாக்கி

பார்த்து மகிழ்வான் ஒரு தந்தை!!!!!!!!!!!

*தன்னுடைய குழந்தை மூலம் தான் அடையாளம் கண்டுகொள்ளப்படும் போதுதான் ஒரு அப்பா , தந்தையாகிறான் !!!!

*அறிவு,உடல்நலம், நல்ல வேலை, சமுதாயத்தின் பாராட்டு இவை யாவும் அவன் குழந்தைக்கு கிடைக்க வேண்டும்

என்றுதான் ஓவொரு தந்தையும் விரும்புகிறான் …தினமும் அதற்காக பாடுபடுகிறான்!!!

*தாயின் தியாகம் தீபம் என்றால் , ஒரு தந்தையின் தியாகம் ஊதுவத்தி போல !!!!

* தன்னுடைய மகன் தன்னை மிஞ்சிவிட்டான் என்றால் , அதற்காக மகிழ்ந்து , நெகிழ்ந்து நிற்கும்

ஒரே ஜீவன் தந்தைதான் !!!!!!!!!!!!!!!!!

*இதோ . இன்று முதிய தந்தை ,சாலையை கடக்கும் பொழுது ..ஒரு புறம் மகளும் , இன்னொருபுறம்

மகனும் , தங்களை வளர்த்து அரவணைத்த தந்தையின் கரங்களை தாங்கிக்கொள்ள பணிவோடு தயாராக உள்ளன!!!!

One thought on “படித்ததில் பிடித்தது !!! அப்பா ……

  1. ஹரி's avatar ஹரி November 14, 2017 / 11:44 am

    எல்லாருக்கும் அமைவது இல்லை
    இவர் போல தந்தை.
    சில விதிவிலக்கான
    தந்தையும் உண்டு.
    நண்பரே

Leave a comment