சுவாசிக்க வேண்டும் நல்ல காற்று !!!!!!!

பவர் கட்!!!!! .பேக்அப் இல்லை !!!!!!….அக்னி வெய்யில் தாக்கம் ….தூக்கம் இல்லாமல் பேரக்குழந்தை

தேம்பி தேம்பி ஒரே அழுகை….. தாத்தா என் கண்ணிலும் கண்ணீர்….பேரன் அழுவதை கண்டு!!!

என் கை விசிறி கொண்டு இதமாக விசிறினேன் குழந்தைக்கு !!!!!…

மிதமான காற்று வர பேரன் முகத்தில் ஒரு சிரிப்பு இப்போது !!!!!!……விசிறியின்

இதமான காற்று எனக்கும் பட்டதால் அசதியில் கண் அயர்ந்தேன் ..ஒரு நிமிடம் !!!!!

தட தட என ஒரு சத்தம் …பட பட என தண்ணீர் கொட்டும் இனிய ஓசை !!!!!

ஆஹா !!!! இடியுடன் கூடிய இனிமையான மழை இந்த பூமி நனைய !!!!!

இப்போதும் என் கண்ணில் தண்ணீர் !!!!! இது ஆனந்த கண்ணீர் !!!!!!!

பேரன் கேட்டான் … . தாத்தா காற்று இல்லாமல் நான் அழுதேன் !!!!! எனக்கு

விசிறும்போது நீங்களும் அழுதீங்க ….இப்போ நம்ம பூமி தாய் அழும் போது

சிரிக்கிறீங்களே தாத்தா ???? காற்று இல்லாமதானே பூமித்தாயும் அழுகிறாள் …

கொஞ்சம் அவங்களுக்கும் விசிறி விட்டு காற்று கொடுங்க தாத்தா நீங்க !!!!!

யோசித்து பார்த்தேன் !!!! பேரன் சொன்னதிலும் ஒரு அர்த்தம் உள்ளது !!!!!!!

பூமி தாய் சுவாசிக்க நாம் இடம் விட்டு வைத்தால்தானே அவள் பிள்ளைகள்

நாம் எல்லாம் நல்ல காற்று சுவாசிக்க முடியும் !!!!!

நேசிக்க வேண்டாமா இயற்கையை நாம் ….சுவாசிக்க வேண்டாமா நல்ல காற்று

நம்முடைய பாச பேரன் பேர்த்தி எல்லாம் !!!!!!!!….யோசிங்க கொஞ்சம் !!!!!!!

நடராசன் ….

18 june 2012

Leave a comment