SOURCE::::RECENT MAIL FROM ONE OF MY FRIENDS….ORIGIN:::FROM VARIOUS MAGAZINES… THE TIMELY PUN OF KI.VA.JA. IS MEMORABLE AND LAUDABLE AT ALL TIMES….HERE ARE FEW TO REFRESH YOUR MEMORY OF THE GREAT PERSONALITY…
Natarajan
சொல்லின் செல்லாதவர்!
வாரியாருக்கும் கி.வா.ஜா.வுக்கும் இடையே அன்பு மிகுதி.
கி.வா.ஜ.வின் சிலேடைகளை வாரியார் ரசிப்பதுண்டு.
வாரியாரின் தமிழ் நயம் செறிந்த சொற்பொழிவுகளை
கி.வா.ஜ. வியப்பதுண்டு.
ஒருமுறை வாரியாரின் சொற்பொழிவைக் கேட்க
வந்திருந்தார் கி.வா.ஜ. கடைசிவரை இருந்து கேட்டு
விட்டுப் போகுமாறு வாரியார் கூறினார்.
‘இயன்றவரை கேட்கிறேன். எனக்கு வேறு பணி உள்ளது.
இறுதிவரை இருக்க இயலுமா தெரியவில்லை’ என்று
சொல்லிவிட்டு கி.வா.ஜ. சொற்பொழிவு கேட்க அமர்ந்தார்.
சிலேடைச் செல்வரைப் பார்த்ததும் வாரியாருக்கும் அன்று
சிலேடைத் தமிழில் உற்சாகம் ஏற்பட்டது. ராமாயணத்தின்
இறுதிப் பகுதியை எடுத்துக் கூறிய வாரியார் பல சிலேடை
வாக்கியங்களை இடையிடையே உதிர்த்தார். வாரியாரின்
சொல்லாற்றலில் கட்டுண்ட கி.வா.ஜ. தம் பணிகளை
மறந்து இறுதிவரை அமர்ந்திருந்தார். கூட்டம் முடிந்ததும்
வாரியாரிடம் சென்றார் கி.வா.ஜ. ‘கடைசிவரை இருந்து
கேட்டீர்களே’ என்று வாரியார் மகிழ்ச்சியடைந்தார்.
‘உங்கள் சொற்பொழிவு அருந் தேன். அதை அருந்தேன்
என்று எவன் சொல்வான்? அருந்தவே இருந்தேன். நீங்கள்
சொல்லின் செல்வர்” என்று வாரியாரைப் பாராட்டினார்
கி.வா.ஜ.
வாரியாரோ ”சொல்லின் செல்வர் அல்ல நான். அது
அனுமனுக்கு உள்ள பட்டமல்லவா?” என்று அடக்கத்தோடு
மறுத்தார்.
‘உண்மை தான். நீங்கள் சொல்லின் செல்வர் அல்ல. நீங்கள்
சொல்லின் எல்லோரும் செல்லாமல் இருந்தல்லவா
கேட்கிறோம்! ‘ என்றார் கி.வா.ஜ.!
————————————
கி.வா.ஜ வீட்டு வேலைக்கார அம்மா விசாலம் என்பவர்
வீடு பெருக்கிக்கொண்டிருந்தார்களாம்.. அந்த அம்மா
கொஞ்சம் குண்டு. கி.வா.ஜவின் மணைவி கொஞ்சம்
நகந்துக்குங்க, விசாலம் பெருக்கனும் என்றார்களாம்..
அதுக்கு கி.வா.ஜ இன்னுமா விசாலம் பெருக்கணும் என்று
கேட்டாராம்..
—————————————-
ஒரு கடை முதலாளியின் வீட்டில் விருந்து. கி.வா.ஜ-வும் அதில் கலந்துகொண்டார். அனைவரும் உணவு உண்ண அமர்ந்திருக்க, கடையில் வேலை செய்யும் ஒரு பையன் மட்டும் இல்லாதது கண்டு, கி.வா.ஜ. அது பற்றி விசாரித்தார். “அவன் கடையைப் பூட்டிவிட்டு வந்து அடுத்த பந்தியில் கலந்துகொள்வான்” என்றார் முதலாளி. ஓகோ! கடை சிப்பந்திக்குக் கடைசிப் பந்தியா?!” என்று கேட்டார் கி.வா.ஜ.
——————
ஒரு நண்பர் வீட்டுக்கு கி.வா.ஜ. போயிருந்தபோது, நண்பரின் மனைவி விளாம்பழத்தில் வெல்லம் போட்டுப் பிசைந்து, அன்போடு கொண்டு வந்து உபசரித்தார். அதை வாங்கி உண்ட கி.வா.ஜ. “மாதுளங்கனி அருமை!” என்று பாராட்டினார். “மாதுளங்கனியா! நான் தந்தது விளாம்பழம் அல்லவோ!” என்று அந்த அம்மையார் குழப்பத்துடன் கேட்க, “மாது உளம் கனிந்து கொடுத்த கனி என்று சொன்னேன்!” என்றார் கி.வா.ஜ. ———————–
கலைவாணரைக் காணச் சென்றார் கி.வா.ஜ. அவரை வரவேற்று உபசரித்த கலைவாணரின் மனைவி மதுரம், “என்ன சாப்பிடுகிறீர்கள்… காபியா, டீயா?” என்று கி.வா.ஜ-வைக் கேட்க, கி.வா.ஜ. சிரித்துக்கொண்டே “டீயே மதுரம்!” என்றாராம்.
நீரில் குவளை
ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத்
தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக்
குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண்மணியிடம் அவர், “நீரில்தான் குவளை
இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு
குவளையிலேயே நீர் இருக்கிறதே!” என்றார்.
நானா தள்ளாதவன்…?
கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க்
கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.
கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே
உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள்
மற்றவர்கள்.
ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத்
தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;
“என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?”
என்று கேட்டார்.
வாயிலில் போடுவேன்..!
கி.வா.ஜ. விடம் ஒருவர், “சாப்பிட்ட பிறகு வெற்றிலை
போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?” என்று கேட்டார்.
அதற்கு, “ஓ…! உண்டே…! ஆனால் வெற்றிலையை
வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல்
விழித்தனர்.
கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது
வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத்
தொட்டியில்தானே போட வேண்டும்?” என்று கூறி
அனைவரையும் சிரிக்க வைத்தார்.
மேலும் சில பின்னூட்டங்கள்-1
திரு. கி.வா.ஜ அவர்கள் ஒருமுறை அவர் நண்பர் வீட்டுக்கு
போயிருந்த போது, பாலும், பழமும் கொடுத்துள்ளார்கள்.
அவர் சிலேடையாக, இங்கு எனக்கு பழம் பால் கிடைத்தது
என குறிப்பிடாராம்.
(பழம் பால் – பழைய பால் என்கிற அர்த்தமும் வரும்)
===============
ஒரு முறை பள்ளியில் பேசும்போது, ‘மாணவர்களே!
கூட்டலுக்கும் பெருக்கலுக்கும்
வித்தியாசம் தெரியுமா?” என்று கேட்டார் கி.வா.ஜ.
மாணவர்கள் விடைதெரியாமல்
விழிக்க ‘இரண்டும் ஒன்றுதான். என் வீட்டு
வேலைக்காரிக்குக்கூடத் தெரியுமே! என்றார்.
===========================================
Dear Nat,
It takes me way back 1967, when KI.VA.JA visited our POLUR house on his way to KETTAVARAMPALAYAM to attend SriRama Navami / Hanumath Jayanthi. If i remember correct, the VILAMBAZA PATCHIDI incident, served by my Grandma, had taken place at that time. After Lunch we started to KEETAVARAMPALAYAM. Filled with over enthu i attempted to occupy the place next to him in the back side of the Ambassador Car, which was already full. Pointing out the vacant front seat before him, he said: கிரி முன்னேருப்பா. The pun in his word astounded me. The தல்லாதவன் இன்சிடென்ட் also had taken place on our way back to POLUR. My Grandma used to say many thing about the born genius கி வா ஜ . Incidentally he was related to Late.ANUTHAMMA ( author of கேட்ட வரம் ) who was also related to us.
Once again taking you for taking me way back to late SIXTIES for a sweet reminiscence.
Very good collection of Ki.Vaa.Ja’s satire and humour.Thanks a lot!
Very nice
Dr.V.C
ENJOYED.ALSO REMEMBERED VARIYAR VERY MUCH. HE USED TO VISIT MUMBAI FOR EVERY VINAYAGER CHATHURTI.
S.RAMAKRISHNAN