படித்ததில் பிடித்தது….விடை தெரியாத கேள்விகள் !!!!!

SOURCE::::UNKNOWN….INPUT RECD. IN MAIL FROM ONE OF MY CONTACTS….TRICKY QUESTIONS… HAVE YOU GOT ANY ANSWER???
PL. TRY TO ANSWER….YOU MAY ALSO ASK YOUR CONTACTS TO ANSWER THE QUESTION!!!!!

Natarajan.

கொடுத்தால் குறையாதது?
அ. அன்பு ஆ. கல்வி

பெற்றால் நிறையாதது?
அ. ஆசை ஆ. புகழ்

பணத்தைவிட மதிப்புமிக்கது?
அ. போதுமென்ற மனம்
ஆ. ஈகை குணம்

உலகில் விலைமதிக்க முடியாதது?
அ. தாயின் அன்பு
ஆ. குழந்தையின் சிரிப்பு

மதிப்பற்றது?
அ.ஈயாதவன் செல்வம்
ஆ.உழைக்காதவன் வணங்கும் கடவுள்

தவிர்க்கவேண்டியது?
அ. அன்பின்றிப் பெறும் உணவு
ஆ.வரவுக்கு மேல் செய்யும் செலவு

அழகு எங்கு உள்ளது?
அ.காண்பிக்கும் கண்ணில்
ஆ.விரும்பும் மனதில்

சுவையான உணவு?
அ.பசித்த பின் உண்பது
ஆ.பகிர்ந்து உண்பது

அறிவு எனப்படுவது?
அ.அறிதல்
ஆ.அறியாமையை உணர்தல்

மறக்க முடியாதது?
அ.வெற்றி
ஆ.தோல்வி

மறக்கக் கூடாதது?
அ.நமக்கு செய்த உதவி
ஆ.நமக்காக அழுத கண்ணீர்

முட்டாள் என்பவன்?
அ.ஒரே தவறைத் தொடர்ந்து செய்பவன்
ஆ.தான் ஒரு முட்டாள் என்பதை அறியாதவன்

எல்லோராலும் முடியாதது?
அ.சிந்திப்பது
ஆ.சிந்தனையை அடுத்தவருக்குப் புரியுமாறு வெளிப்படுத்துவது

சிரிப்பை வரவழைப்பது?
அ.அரசியல்வாதிகளின் பேச்சு
ஆ.ஆன்மீகவாதிகளின் சொற்பொழிவு

நண்பர்களே..
கொடுக்கப்பட்ட பதில்கள் இரண்டுமே
சிலருக்குச் சரியாகத் தோன்றலாம்!
சிலருக்குத் தவறாகத் தோன்றலாம்!

இந்த உலகில் எல்லாம் இப்படித்தான்!
இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோமா? மூன்றாவதாக ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறோமா? என்பதில் தான் நம் வாழ்க்கை சுழன்றுகொண்டிருக்கிறது

One thought on “படித்ததில் பிடித்தது….விடை தெரியாத கேள்விகள் !!!!!

  1. N.GANESAN (LIC)'s avatar N.GANESAN (LIC) July 20, 2012 / 3:56 am

    NICE SAYING, ENCOURAGING ME EVERYDAY YOUR MAIL. THANKS SIR

Leave a comment