SOURCE::::Stalin ksa from chennaipithan.blogspot.com… INPUT FROM ONE OF MY CONTACTS… NICE TO READ AND SWEET ONE TO SHARE WITH YOU ALL…
natarajan
கண்ணாடியில் தெரியும் பிம்பம் யார்?!
இக்கால முகம் பார்க்கும் கண்ணாடிகள்
மிகத் தரம் குறைந்தவை!
என் முகத்தைப் பார்க்கிறேன் கண்ணாடியில்
எதிரில் தெரிவது நிச்சயமாய் நானில்லை!
முதுமை அடைந்து சுருக்கம் விழுந்து
பொலிவிழந்த முகம்
அது என் முகம் இல்லை சத்தியமாய்!
நான் இதை விட இளமையானவன்.
என்ன கண்ணாடி இது?
நல்ல கண்ணாடியெல்லாம்
நாற்பது ஆண்டுக்கு முன்!
அப்படியே இளமையாய், அழகாய்ப்
பிரதிபலிக்கும் என் முகத்தை.
கண்ணாடியில் தெரியும் முகம்
வாடிச் சுருங்கியிருந்தால்
வருத்தம் அடையாதீர்.
கண்ணாடியில்தான் குற்றம்
முகத்தில் இல்லை!
கண்ணாடி மாற்றினும் பயனில்லை
ஏனெனில்
இக்காலக் கண்ணாடிகள்
அக்கால கண்ணாடிகள் போல்
மிகத் தரமானவை அல்ல!
coutesy: Stalin ..chennaipithan .blogspot.com