நீங்க ஒரு அதிர்ஷ்டசாலியா ?

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா?

உணவும், உடையும், இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய். வங்கியில் உனக்குப் பணமிருந்தால் உலகின் முதல் 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன். நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இறந்த பலரைவிட நீ பாக்கியவான். போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு. கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ. உன் பெற்றோர் பிரியாமலும் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள். உன்னால் தலைநிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன். இந்தச் செய்தியைப் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 200 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். எனவே இறைவன் நமக்கு அளித்த ஆசிகளை நினைவு கூர்ந்து முன்னேற வேண்டும்… சோர்வடைய கூடாது.

source:::: DINAMALAR ..Tamil Daily….

Natarajan

One thought on “நீங்க ஒரு அதிர்ஷ்டசாலியா ?

  1. bhavani's avatar bhavani October 10, 2012 / 11:38 am

    After reading this only we understand how lucky we are!
    bhavani

Leave a comment