வாரம் ஒரு கவிதை …” அதி ரூபன் தோன்றினானே …”

அதிரூபன்  தோன்றினானே …
++++++++++++++++++++++++++++
அதி ரூபனாகத்  தோன்றி அருளும்
அத்தி வரதன் சொல்லும் செய்தி
என்ன தெரியுமா ?
இந்த மண்ணில் நான் வாசம் செய்யும் சமயம்
நான் முடிக்க வேண்டிய பணியோ ஏராளம் !
உடன் முடிக்க வேண்டும் அந்த அருட்பணி
அத்தனையும் மீண்டும் என் ஜல வாசம்
தொடங்கும் முன்!
என் மண்ணின் வாசம் எத்தனை நாள்
தெரியும் எனக்கு ! இந்த மண்ணில்
உன் வாழ்க்கை  எத்தனை நாள் இன்னும் ?
தெரியுமா உனக்கு  மனிதனே ?
புரிந்து நடந்து கொள்  மனிதா நீ !
அத்தி வரதன்  எனக்கே இந்த மண்ணில்
வாழ்வு  ஒரு சில நாட்களே என்றால்
என்னைப் பார்க்கத் துடிக்கும் உனக்கு
நீ காணும் ஓவொரு காலையும் உனக்கு
மறு பிறவியே !
நாளை  நாளை என்று நாளைக் கடத்தாமல்
இன்றே இப்போதே உன் கடமையை
செய்து முடித்துவிடு மனிதா நீ !
நிரந்தரம் என்று எதுவும் இல்லை எனக்கும்
உனக்கும் !
K .நடராஜன்
in http://www.dinamani.com  dated 24/07/2019
24/07/2019

வாரம் ஒரு கவிதை ….” அன்பே சிவம் “

அன்பே  சிவம்
+++++++++++++++
ஆசை அன்பு  அச்ச அன்பு இறை அன்பு
என்று அன்பு எடுக்கும் பல அவதாரம் !
இது ஒரு  மஹரிஷியின் வாக்கு !
எல்லா உயிரையும் இறைவனாகப்
பார்த்து பாவித்து இறை அன்பை
வேண்டி நின்றால்  இறைவன் பொழிவான்
அவன் அன்பை உன் மேல் தம்பி !
அன்பே சிவம் என்னும் உண்மை நிலை
உனக்கு புரிந்து விட்டால் , இறை அன்பு
தவிர்த்து , ஆசை அன்பும், அச்ச அன்பும்
துச்சமாகத்  தெரியும் மிச்ச வாழ்வில் உனக்கு !
இறை அன்பு ஒன்றுதான் நிலையானது
என்னும் உண்மை  உனக்கு தெரிய வரும் நேரம்
அன்பே சிவம் என்பதின் அர்த்தமும்  புரியும்
உனக்கு  தம்பி !
K.Natarajan
in www. dinamani.com dated 17th July 2019

வாரம் ஒரு கவிதை ….” நெடு வாழ்வின் நினைவு “

நெடு வாழ்வின் நினைவு
+++++++++++++++++++++++
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்தது இந்த பூமி !
சில நாள்  வாழ்ந்தாலும்  பல நாள் வாழ்ந்தாலும்
பதிக்க வேண்டும் நான்   ஒரு நல்ல முத்திரை !
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நானும்
படைக்க வேண்டும் சரித்திரம் !
ஆயிரம் பிறை காண ஆசை எனக்கு  என் நெடு
வாழ்வில் ! அந்த நெடு வாழ்வின் நினைவலைகள்
மீது விடாது தொடர வேண்டும் என் படகுப்
பயணம் …நெடு வாழ்வின் இனிய பயணம் !
என் பயணம் முடிந்தாலும் தொடர வேண்டும்
என் பிள்ளைகள் பயணம் அதே படகில்
என் நெடு வாழ்வின் நினைவலைகள் மீது !
படைக்க வேண்டும் அவரும் ஒரு சரித்திரம்
அவரவர் நெடு வாழ்வில் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  26/06/2019

வாரம் ஒரு கவிதை ….” தாக்குங்கள் எங்களை ….” !!!

தாக்குங்கள் எங்களை ….
++++++++++++++++++++++++
படையெடுத்து வாருங்கள் …அணிவகுத்து
வாருங்கள்  எங்களைத்  தாக்க !
குறி பார்த்து தாக்குங்கள் எங்களை !
காத்திருக்கிறோம் நாங்கள் !
மிரண்டு ஓடி ஒளிய மாட்டோம் நாங்க !
திரண்டு வாருங்கள் கருமேகங்களே
“குண்டு ”  மழை  பொழிய !
மண்டியிட்டு உங்களை வணங்குவோம்
உங்கள் “குண்டு ” மழை எங்களை
முத்தமிடும் நேரம் !
தாக்குங்கள் எங்களை சீக்கிரம் !
K .நடராஜன்
22/06/2019