11 டிசம்பர் …பாரதி பிறந்த நாள் !!!!

source:::: A Poetic tribute to Subramania Bharathiyar on his birth day today .. 11 Dec…. Kavithai from SHRI. SANKARANARAYANAN SADASIVAM , Coimbatore..

Natarajan

எட்டைய புரத்தில் பிறந்து
பாட்டு திறத்தாலே
எட்டாத உயரத்தை
எட்டிப் பிடித்தவன்
.சொற்களில் சுடு
ஏற்றி சூரியனை
வெட்கவைத்தவன்
சிந்திக்கும் வேகத்தில்
எழுத்துகளாய் விழுமுன் – கவிதை
சிந்திசிதறி விடுமோ என
முண்டாசு கட்டிகொண்டவன்
அடிமை இந்தியாவின்
துக்கத்தை
கருப்புக்கோட்டில்
காட்டிக்கொண்டவன்
ஆனால்
கனவில் கவிதையில்
விடுதலை கொண்டாடியவன்
இல்லை
எதிர்கால இந்தியாவிற்கு
கட்டியங்க்கூரியவன்
பண்டிதர் வீட்டில்
புதைந்து கிடந்த
பாட்டுச்சுகத்தை
பாமரனுக்கும்
பரிமாறியவன்
உறங்கிக்கிடந்த
பாரதத்தை
உசுப்பிவிட பூபாளம்
இசைக்காமல்
கம்பீரநாட்டையில்
முழங்கியவன்
பார்
அதிர
பாட்டு எழுதிய
பாரதி
பாட்டுக்குள்
ராகம் வைத்தான்
அடிமை வாழ்வின்
சோகம் இசைத்தான்
வீறுகொண்டு எழ
வேகம் வைத்தான்
அதனால் தன
தாகம் தீர்த்தான்
காலத்தை விஞ்சிநிற்கும்
பாட்டு
எழுதி
காலனைக் காலால்
எட்டி உதைத்தவன்
வாருங்கள் பாரதி பிறந்தநாளில்
அவன் புகழ்
கொண்டாடுவோம் !!!!!!!!!!!!

By….
Sankaranarayanan Sadasivam

Leave a comment