Thanks to Kannan for the article…Wish I had posted it on a timely manner….
காஞ்சி மகாபெரியவர் காலத்தில், காஞ்சிபுரம் திருமடத்தில் கார்த்திகை திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இரண்டு நாட்கள் முன்னதாகவே மடத்தைச் சுத்தப்படுத்தும் பணி துவங்கி விடும். வாழை மரங்கள், தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்வார்கள்.
திருக்கார்த்திகையன்று அதிகாலை மகாபெரியவர் ஸ்நானம் செய்து, பூஜைகள் செய்வார். மடத்திலுள்ள சந்திர மவுலீஸ்வரருக்கு அன்று சிறப்பு பூஜை நடத்தப்படும். பெரிய, சிறிய அகல் விளக்குகள் ஏராளமாக மடத்துக்கு கொண்டு வரப்படும். விளக்கேற்றும் நேரத்துக்கு முன்னதாகவே, அதில் திரியிட்டு இலுப்ப எண்ணெய் ஊற்றி தயார் நிலையில் வைக்கப்படும்.
மாலையில், பெரியவர் ஸ்நானம் செய்வார். பின் பூஜை செய்வார். அதன் பின் ஒரு தீப்பந்தத்தில் “குங்குளயம்’ என்னும் தீபம் ஏற்றப்படும். அவ்வாறு ஏற்றும் போது மந்திரங்கள் ஒலிக்கும். சிவ சகஸ்ரநாமம், லிங்காஷ்டகம், சிவ அஷ்டோத்ர பாராயணம் ஆகியவை செய்யப்பட்டவுடன், அவல், நெல் பொரி போன்றவற்றுடன் வெல்லம் கலந்து உருண்டைகளாகச் செய்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வார்கள். பிறகு தீபங்கள் வரிசையாக ஏற்றப்படும்.
அப்போது ஏராளமான பெண்கள் மடத்திற்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, மட்டைத் தேங்காய் ஆகியவற்றைப் பலரும் தானமாகக் கொடுக்கும் படி மகாசுவாமிகள் சொல்வார். பலரும் அவ்வாறு தானம் செய்வர்.
அப்போது பக்தர்களிடம் பெரியவர், “”மட்டைத் தேங்காயைத் தானமாகக் கொடுப்பதால் பூர்ண பலன் ஏற்படும். தேக ஆரோக்கியம் நிலைக்கும்…
View original post 167 more words
