ஒங்களுக்கு ஸௌகர்யப்படுமா?

Mahesh's avatarSage of Kanchi

Thanks to Sri Gowrishankar for the article.

Periyava_doing_chandramouleeswarar

1964-ல் சோழவரத்தில் இருந்த மீனாக்ஷிஸுந்தரமையர், ஒரு பள்ளி ஆசிரியர்; பெரியவாளிடம் அபார பக்தி. ஆனால், வேலைப்பளு காரணமாக பெரியவாளை தர்ஶனம் பண்ண போகமுடியவில்லையே என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருந்தார்.

அன்று காரடையார் நோன்பு. அந்த முறை, பங்குனி மாஸம் ராத்ரி பிறந்ததால், நோன்பையும் ராத்ரி பண்ணிவிட்டு ரொம்ப நேரம் கழித்து அவர் மனைவி தூங்கப் போனாள்.

அவளுக்கு அற்புதமான ஒரு கனவு!

எந்த ஒரு அவதாரத்தால் காஷாயத்துக்குப் பெருமையோ, அந்த மஹா பெரியவா அந்த அம்மா முன்னால் நிற்கிறார்! அவருடைய பாதங்களில் விழந்து நமஸ்கரிக்கிறாள். பெரியவாளின் தெய்வீக குரல் ஒலிக்கிறது…..

“வாழ்க்கைல எந்தக் கஷ்டத்தையும் பகவானோட நாமஸங்கீர்த்தனம் போக்கிடும். கவலைப்படாதே! நா……ஒன்னோட ஆத்துல பூஜை பண்ணுவேன்”…

ஸந்தோஷத்தில் திடுக்கென்று எழுந்தால், கனவுதான் என்று உணர்ந்தாலும், மனஸ் ரொம்ப நிறைந்து இருந்தது. அடிக்கடி அந்தக் கனவை எண்ணி எண்ணி தம்பதிகள் மகிழ்வார்கள்.

“ஆனாலும், எனக்கு ரொம்ப பேராசைதான்!… மஹா பெரியவா நம்மாத்துல பூஜை பண்ணணும்-ன்னு எப்டி ஆசைப்பட்ருக்கேன்!..”

மனைவி சொன்னாள்.

1965 நவம்பர் மாஸம் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை. மத்யான்னம் அவர்கள் வீட்டு வாஸலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து பூணூல், ஶிகை வைத்துக்கொண்டு பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு ஒரு பெரியவர் இறங்கினார்.

“மீனாக்ஷிஸுந்தரமையர்….??…….”

“ஆமா….நாந்தான்…..மீனாக்ஷிஸுந்தரம்…. வாங்கோ! நீங்க யாருன்னு தெரியலியே!.”

“நா….ஸ்ரீமடம் முகாம்லேர்ந்து வரேன்..பெரியவா திருப்பதிலேர்ந்து மெட்ராஸ் வந்துண்டிருக்கார்…ஒரொரு 15 மைலுக்கு…

View original post 214 more words

Leave a comment