
அம்பாளுக்கு உரிய ஒன்பது சிறப்பு நாட்கள், நவராத்திரி. இந்நாட்களில், அம்பாளை பிரார்த்தனை செய்தால் கிடைக்கும் பலன் போன்று, வேறு எப்போது பிரார்த்தனை செய்தாலும் கிட்டாது. கலை, பொருள் மற்றும் சக்தியின் அம்சமான அம்பாளை, இந்த ஒன்பது நாட்களும் பிரார்த்தனை, பாராயணம் செய்தால், மேற்கூறிய பலன்களையும் நமக்கு நல்குவாள். உலகில் உயிர் வாழ, இந்த சக்திகளும் இன்றியமையாதவை. வரும் நவராத்திரி கொலுவை வித்தியாசமாக கொண்டாட சில, ‘டிப்ஸ்’ இதோ…
* கொலு ஷாப்பிங் செல்பவர்கள், புத்தக கடைகளுக்கு சென்று, ‘ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள், விவேகானந்தர், ரமண மகரிஷி மற்றும் காஞ்சி பெரியவரின் உபதேசங்கள், ‘வாழ்வில் சிறக்க’ மற்றும் ‘மனஅமைதி பெற என்ன செய்யலாம்’ இப்படி பல குட்டி புத்தகங்கள் பத்து ரூபாய்க்கு கிடைக்கின்றன. இவற்றை கொலுவிற்கு வருவோருக்கு தரலாம். 50 ரூபாய் பிளவுஸ் பிட்டில் கிடைக்கும் திருப்தி, இப்புத்தகத்திலும் கிடைக்கும்.
* குழந்தைகளுக்கு நம் நாட்டு கலாசாரம், பண்பாடு மற்றும் இதிகாச புராணங்களை தெரிய வைக்க, நவராத்திரி பண்டிகை நல்ல சந்தர்ப்பம். கொலுவில், ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளின் முக்கிய நிகழ்வுகளை, ‘தீமாக’ அமைக்கலாம். அத்துடன், ஹாரிபார்ட்டர் கதைகள் மற்றும் டோரா புஜ்ஜி போன்றவற்றை கூட அமைக்கலாம். இது, பழமைக்கும், புதுமைக்கும் பாலம் அமைத்து, இந்த நவராத்திரியை களை கட்ட வைக்கும்.
* உங்கள் பிள்ளைகளை, கரும் பலகையில், நவராத்திரி பற்றிய விஷயங்களை தினம் ஒன்று எழுதச் சொல்லி, கொலுவில் வைக்கலாம். நவராத்திரி கலச…
View original post 149 more words