
நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.
எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.
மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.
இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:
காங்கேயம்: கம்பீரமும் அழகும்
ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு…
View original post 432 more words