உழவும் பசுவும் ஒழிந்த கதை!ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று குருகுலக்கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.
அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார். இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார்.
அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.
இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.
நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார். இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.
நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம். இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.
அவர்…
View original post 484 more words