சட்டம்
…….
திட்டம் போட்டு தீட்டும் சட்டம் சுற்றும்
ஒரு வட்டத்துக்குள் ! வட்டத்தை
தாண்டி கால் வைக்காதவரை
சட்டம் தண்டிக்காது ! இது
சட்டத்தின் நீதி ! சட்டத்துக்காக
பட்டம் எதுவும் பெறாத ஒரே
சட்டம் ஒருவரின் மனசாட்சி !
மனசாட்சியின் அரசாட்சி ஒரு
வட்டத்தில் சுற்றாது ! எது நியாயம்
எது தர்மம் என குரல் கொடுப்பது
மனசாட்சி மட்டுமே ! தம்பி நீ
இப்போது சொல்லு … சட்டம் சொல்லும்
நீதிக்கு தலை வணங்கினால் மட்டும்
போதுமா … இல்லை .. உன் மனசாட்சியின்
குரல் சொல்லும் நியாயம் தர்மத்தின் வழி
நீ நடக்க வேண்டுமா வேண்டாமா ?
மனிதன் போடும் சட்டம் நம் மனசாட்சியின்
முன்னே ஒரு காகிதப் பட்டம் !
நீதியை மீறவேண்டாம் நீ … அதே சமயம்
மறக்கவும் வேண்டாம் நீ எது நியாயம்
எது தர்மம் என்று உன் வாழ்க்கையில் !
My Kavithai as published in http://www.dinamani.com
Natarajan