பொங்கல் வாழ்த்து

இந்த நாள் …பொங்கல் நன்னாள்…வாழ்த்து..ஒருவருக்கொருவர் நாம் பரிமாறும் நேரம் …நினைத்துப் பார்க்க வேண்டும் அந்த உழவன்.குடும்பத்தை.

இந்த நல்ல நாளில்.நாம் சொல்ல வேண்டும் வணக்கமும் நன்றியும் அந்த விவசாயிக்கு .
அவன் சேற்றில் கால் வைக்க மறுத்தால் அல்லது மறந்தால் நாம் சோற்றில் கை வைக்க முடியுமா ,?

நாம் வாழ்த்து பெற வேண்டும் அவனிடம் இன்று …அவன் வாழ்த்த வேண்டும் என்றால் அவன் உண்ண வேண்டும் முதலில் வயிறார
….அவன் வயிறு நிறைய வேண்டும் என்றால் விளைச்சல் அதிகம் இருக்க வேண்டும் ….மழை.பொய் க்காமல்..
பயிர் நிறைந்து …மலர்ந்து அந்த உழவன்
முகமும் மலர வேண்டும் .

நமக்கு உணவு கொடுக்கும் அவன் தன் தேவைக்கு மற்றவரிடம் மன்றாடும் நிலை
மாற வேண்டும்.

அவனை …அவன் விளை பொருளை….
மதித்து …அவனுக்கு சேரவேண்டிய நியாயமான ரொக்க ஈடு அவனுக்கு கிடைத்தால் அவன் வயிறும் நிறையும் .அவன் குடும்பத்தின் வயிறும்
நிறையும் .

மனம் மகிழ்ந்து அந்த விவசாயி நம்மை
வாழ்த்தும் நேரம் …நமக்கு பொன்னான நேரம் .அது ஒன்றே உண்மையில் பொங்கல் வாழ்த்து .

அந்த விவசாயி மன மகிழ்வுடன் சொல்லும்
பொங்கல் வாழ்த்து வெறும் அட்டை வாழ்த்து அல்ல….அவன் வாழ்ந்தால் நாமும் வாழ்வோம் …அவன் வாழ்த்தும் அந்த நாளுக்காக காத்திருப்போம் நாம் …

நடராஜன்

14..jan 2018

Leave a comment