நட்சத்திரங்கள் விழும் இரவினில் ….
—————————–
எட்டாத உயரத்தில் கண்சிமிட்டும் விண்மீன்கள்
என்னைப் பார்த்துதான் சிமிட்டுது அதன் கண்ணை
என எண்ணி நான் என் கண் சிமிட்டாமல்
ரசிப்பேன் விண்மீனின் கண் சிமிட்டலை நிலவொளி
இரவில் !
விண்ணில் இருந்து விண்மீன்கள் வருமா
மண்ணுக்கு ?….இது ஓரு கேள்வி
என் மனதில்..!.ஒரு நாள் இரவு விண்மீன்
கூட்டம் ஒன்று வரிசை வரிசையாய் என்
கண் முன் வான வேடிக்கை காட்டி
விண்ணில் இருந்து எரிந்து மண்ணில்
விழும் காட்சி நான் பார்க்கும் வரை !
மண்ணுலகம் பிரிந்து நாம் விண்ணுலகம்
செல்வது போல் ஒருவேளை நாள் ஒன்று
குறிக்கப் படுமா ஒவ்வொரு விண்மீனுக்கும்
விண்ணுலகம் மறந்து பறந்து வந்து இந்த
மண்ணில் மடிய ? பதில் தெரியாத கேள்வி
இது எனக்கு !
Natarajan.K in http://www.dinamani.com dated 22nd August 2018