இடைவெளி
============
இணையத்தின் துணையால் இந்த உலகே
இடைவெளி இல்லா ஒரே சமவெளி ஆனதே !
ஆயிரம் ஆயிரம் மைலுக்கு அப்பால்
இருந்தாலும் இணையத்தின் இணைப்பு
இணைக்குது பல உறவுகளை இடைவெளி
தெரியாமல் !
இருக்கும் இடத்தில் பாச உறவுகளை
மறக்க வைத்து இடைவேளை என்று
ஒன்று இல்லாமல் ஒரு சிலரை தன்
வலையில் சிக்க வைத்து வேடிக்கை
பார்ப்பதும் அதே இணையம்தான் !
இணையம் தேவை நமக்கு நம் உறவுகளின்
உறவை மேலும் மேலும் வலுப்படுத்த !
இணையத்தால் நம் உறவுகள் முறிந்து
இடைவெளி முளைக்கும் என்றால் வேருடன்
களைவோம் நம் இணைய உறவை இன்றே !
Natarajan .K in http://www.dinamani.com
dated 14/10/2018
Excellent kavithi