வாரம் ஒரு கவிதை ….” இரட்டையர் “

 

இரட்டையர்
++++++++++++
முகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள்
இரண்டு ….அவர் இரட்டையர் !
குழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும்
அவர் இருவரும் இரட்டையர் என்று !
புறம் ஒரு முகம்  அகத்தில் வேறு முகம்
என்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு
முகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர்
சிலரும் உண்டே  நம்மிடையே !
புரட்டி புரட்டிப் பேசும் இந்த “இரட்டியரை”
சொல்ல முடியுமா “இவர் இரட்டியர் ” என்று ?
Natarajan K   in http://www.dinamani.com  dated
22/05/2019
Advertisements

வாரம் ஒரு கவிதை …” முதல் முத்தம் ” 3

முதல் முத்தம் ..3
+++++++++++++
இதயத்தில் ஒரு பட படப்பு ..ஒரு
எதிர்பார்ப்பு !  புது மணப்பெண்ணின்
புத்தாடை நளினம்  ,சுகந்த மலர் நறுமணம் !
இதழும் என் கையில் இதமாக !
அவசரம் அவசரமாக இதழில்
தேடினேன் ! தேடியது கிடைத்ததும்
இமை மூடாமல்  கொடுத்தேன் அந்த
இதழுக்கு  ஒரு அன்பு முத்தம் ! ஆம்
முதல் முதலாக என் கவிதையை
அச்சில் பார்த்த நான் அந்த வார
இதழுக்கு மகிழ்ச்சியில் கொடுத்த முத்தமே
என் முதல் முத்தம் !
K.natarajan
15/05/2019

வாரம் ஒரு கவிதை…..முதல் முத்தம் ” 2

முதல் முத்தம் ..2
+++++++++++++
அன்னையர் தினம் என்று என் காலத்தில்
எதுவும் இல்லை! எல்லா நாளும் அன்னையர்
தினம்தான் !
அன்னையர் தினம் இன்று  எல்லோரும் சொல்லும்
போதும் அவரவர் அம்மாவுக்கு ஒரு பரிசு
கொடுக்கும் போதும் நான் தேடுகிறேன்
என் அம்மாவை ! என் அம்மா எதுவும்
என்னைக் கேட்டது இல்லை ! நானும்
அம்மாவுக்கு பரிசு என்று எதுவும்
கொடுத்தது இல்லை !
நிஜமாய் இருந்த என் அம்மா நிழலாக
புகைப்படத்தில் இன்று !  அன்னையர் தினம்
இன்று அம்மா நான் உன் நிழலுக்கு
தருகிறேன் ஒரு பரிசு ! கண்ணில் நீர் மல்க
தருகிறேன் உன் பிள்ளை நான் உனக்கு ஒரு
அன்பு முத்தம் உன் புகைப் படத்துக்கு !
இதுவே என் முதல் முத்தம் உனக்கு அம்மா !
Natarajan.K
15/05/2019

வாரம் ஒரு கவிதை ….” முதல் முத்தம் “

 

 

முதல் முத்தம்
++++++++++++++
சுட்டெரிக்கும் வெயில் … அனல் பறக்கும் காற்று
தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் என் நகர மக்கள் !
வாடும் பயிர் பார்த்து வானம் பார்த்தான் விவசாயி
அன்று !  வறண்டு கிடைக்கும் குடிநீர் ஏரி கண்டு
கதி கலங்கி மிரண்டு கிடக்கிறான் நகரவாசி இன்று !
மிரட்டியது போதும் ! இயற்கை அன்னையே !
கரு மேகம் திரட்டி  ஒரு கோடை மழை என் நகருக்கு
பெரு மழை யாய்  பொழிந்து விடு அம்மா !
உன் அருள் மழை என் மண்ணை முத்தமிடும்
நேரம் நானும் என் மண்ணில் மண்டியிட்டு  குனிந்து
என் மண்ணை முத்தமிடுவேன் !  என் நகர மண்ணுக்கு
நான் கொடுக்க இருக்கும்  முதல் முத்தம் அதுவே !
சீக்கிரமே உன் அருள் மழை ஒரு பெரு மழையாய் மாறி
முத்தமிடவேண்டும் என் மண்ணை மாரி தாயே !
Natarajan.K
in http://www.dinamani.com dated 15/05/2019