
Flight on a clear sky…






அடையாளம் காட்டுமா இந்த அட்டை ?
எத்தனை எத்தனை அடையாள அட்டை
நீயும் நானும் இந்த மண்ணில் பிறந்து
வாழ்கிறோம் என்னும் உண்மையை
உறுதி செய்ய !
எங்கு சென்றாலும் யார் கேட்டாலும்
காண்பிக்க வேண்டும் ஒரு அட்டை !
நம் அம்மா அப்பா தவிர எல்லோரும்
கேட்கிறார் நம்முடைய அடையாளம்
என்ன என்று !
ஒரு மனிதனை அடையாளம் காட்டும்
சிறு அட்டை அடையாளம் காட்டுமா
அந்த மனிதன் மனித நேயம்
உள்ளவனா இல்லையா என்று ?
கந்தசாமி நடராஜன்
18/12/2020
என்ன பெயர் குழந்தைக்கு ?
பிறந்தது குழந்தை …புது உலகம்
பார்த்தது … அம்மா அப்பா பாட்டி
தாத்தா என்று பலர் முகம் பார்த்தது
வியந்தது குழந்தை !
இந்த பெயர்தான் குழந்தைக்கு ..ஆள்
ஆளுக்கு ஒரு பெயர் சொல்ல சொல்ல
முழித்தது குழந்தை !
பெயர் ஒன்று போதும் ..ஒரு மெயில் id
password தான் முக்கியம் எனக்கு
சொன்னது குழந்தை பதிலுக்கு !
முழித்தனர் பெற்றோர் ! விழி பிதுங்கி
நின்றனர் சுற்றமும் நட்பும் !
கந்தசாமி நடராஜன்
18/12/2020


