வாரம் ஒரு கவிதை

நல்ல பாடம் ஒன்று !!!


என் அடுக்கு மாடி குடியிருப்பில் அடுத்த வீட்டில் 
யார் ? மேல் வீட்டில் யார் ? கீழ் வீட்டில் 
யார் யார் ? 

எதுவும் எனக்கு தெரியாது ! நான் உண்டு என் 
வேலை உண்டு ! அவ்வளவே எனக்கு தெரியும் !
புரட்டிப் போட்டு விட்டான் இந்த அசுரன் !
கொராணாசுரன் !

வீட்டுக்குள் முடக்கி விட்டான் என்னை பல
மாதமாக ! 
ஒரு குட்டி நடை போட மொட்டை மாடிக்கு 
செல்லும் எனக்கு புது நண்பர் கூட்டம் 
இப்போது ! பக்கத்து வீட்டு அன்பர் உட்பட !

பக்கத்து வீட்டு நண்பர் மட்டுமா !
பக்கத்து தெரு அடுக்கு மாடிக் குடியிருப்பு 
அன்பர் பலரும் மொட்டை மாடி நடையில் 
கை அசைத்து ஜாடை மொழியில் பேசும் 
விநோதமும் பார்க்கிறேன் நான் இப்போ !

நானும் மௌன மொழியில் கை அசைத்து 
வணக்கமும் சொல்வது எனக்கே ஒரு 
அதிசயம் ! 

கொரானாசுரன் நம்மை வதைத்த நேரம் 
நேசிக்கவும் செய்து விட்டான் பிற 
மனிதரை !

இதுவும் ஒரு நல்ல பாடமே எனக்கும் 
என்னைப் போல பலருக்கும் !

கந்தசாமி  நடராஜன் 

வாரம் ஒரு கவிதை

மலரட்டும் மீண்டும் ஒரு தீபாவளி 


நராகசுரன் வதத்தில் மலர்ந்தது ஒரு 
தீபாவளி !
இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் ஒரு 
அசுரன் இப்போ நம்மிடையே ! அவன் 
கொரானாசுரன் !
வதைக்க வேண்டும் விரைவில் இந்த 
அசுரனை !
மீண்டும் மலரும் அப்போதுதான் 
இனிய தீபாவளி ! 

இன்னொரு தீபாவளி மலரட்டும் 
விரைவில் ! ஒளி பரவட்டும் 
மக்கள் முகத்தில் ! அவர் 
மனம் குளிரட்டும் இந்த கலியுக 
அசுரன் வதத்தில் !
மலரட்டும் மீண்டும் ஒரு தீபாவளி !

கந்தசாமி  நடராஜன்