“”” பாட்டொன்று கேட்டால் நான் என்ன பாரதியா கேட்டவுடன் பட்டென்று ஒரு பாட்டு எழுத !!!
பாட்டுக்கு ஒரு பாரதி —நல்ல கவிதைக்கு ஒரு கம்பன் –அந்த கம்பன்
வீட்டுக் கட்டு தறியும் கவி பாடுமாம்!!!!!! ——என்னில் ஒரு ஆசை
பாட்டு எழதும் ஆசை — விட்டேனா பார் என்னும் வேகம் !!!!
எடுத்தேன் ஒரு தாளை !!! கொட்டினேன் அதில் என் பாட்டை!!!!!!
படித்து படித்து ப் பார்த்தேன் … தேன் என இனித்தது என் கவிதை !!!!!
விண்ணில் பறந்தேன் நான் —- இந்த மண்ணில் இல்லை என் கால் !!!!!!
நான் செதுக்கிய கவிதையை பதுக்க என் கணிப்பொறி நோக்கி ஓடினேன் !!!!!
கணிப்பொறி உதவி நாடினேன் என் கவிதை பதுக்க—–
பதுக்க வேண்டிய கணிப்பொறி என்னிடம் கேட்டது —
இது என்னப்பா கவிதை — எதுகை இல்லை -மோனை இல்லை- ஒரு
கவிதைக்கு சொந்தம் சொல்ல சந்தமும் இல்லை !!!!
இது ஓதுக்க வேண்டிய கவிதை —பதுக்க முடியாத பாட்டு!!!!!—
இதை எடுத்துக்கொண்டு நீ உன் நடையை கட்டு !!!!!–
இது என் அருமை கணிபொறியின் தீர்ப்பு !!!!!
இது கவிதை அது கவிதை என்னும் இந்த புது கவிதை யுகத்தில்
இதுவா கவிதை என்று கேட்கிறதே என் கணிப்பொறி ___
இது கணிப்பொறியா இல்லை கம்பன் வீட்டு கட்டுத்தறி யா !!!!!!!!!!!!!!!!!!!
நடராசன்
A Kavithai to be circulated or published.