அப்பா–எங்கே உங்கள் அஞ்சல் அட்டை ?

ஆயிரம் பிறை கண்டு –ஆண்டு ஒன்று  நிறைவாகும் தருணம் ….அப்பா   நீங்க

ஒன்றுமே சொல்லாமல் சென்று விட்ட மாயமென்ன …

காயமே இது  பொய்யடா–இது வெறும் காற்றடைத்த  பையடா–என்று

சொல்லாமல் சொன்ன உண்மையா !!!!

எல்லோருக்கும் எப்போதும் ஒரு கடிதம் –தன் கைப்பட —

வாழ்த்து கடிதம் முதல் இரங்கல் வெண்பா  வரை –அது

உங்கள் அடையாள சின்னம் !!!!

மின் அஞ்சலையும் மீறி உங்கள் அஞ்சல்  அட்டை –அடையாளம்

காட்டும் உங்களை பலருக்கும் !!!!

ஒரு வேளை  இதுதானோ  PERSONAL TOUCH  என்பது !!!!

மின் அஞ்சல் அடையாளம்  உங்களுக்கு  வேண்டாத ஒன்று !!!!

எனக்கு ஒரு முகவரி தந்த உங்களிடம் இப்போதும் உள்ளதே –என்

முகவரி ….பின்  என்னப்பா தயக்கம் ??? —தாமதம் ???

வரவேண்டும்  ஒரு அஞ்சல் அட்டை உங்களிடமிருந்து  மீண்டும்  எனக்கு –

தர வேண்டும்  அது  புத்துணர்ச்சி  என்றும்  எனக்கு !!!!!!

நடராசன் ….. kavithanjali  on date 10 june 2007

3 thoughts on “அப்பா–எங்கே உங்கள் அஞ்சல் அட்டை ?

  1. A.V.Ramanathan's avatar A.V.Ramanathan February 14, 2012 / 9:57 am

    My Father who always communicated to everyone only by post card with affection passed away 2 months before. Your nice kavithai reminded me of my Father and reflected well the sorrowful mood I am experiencing now! Regards.

    -A.V.Ramanathan

  2. $Servo$ R.S.Vasan's avatar $Servo$ R.S.Vasan February 14, 2012 / 11:19 am

    முக்காலத்தை உணர்த்தும் வினைதொகையாக முக்கண் பெயர் கொண்டவரே
    ஒரு கணக்கு மேதையாக ஒரு மா மனிதனாக கண்ட எங்களுக்கு கவி புனையும் கவிஞ்ஞனாக உங்களை காண்பதில் படிப்பதில் பெருமை கொள்ளுகிறோம்

    சத்யா & சுரேஷ்

  3. preethi's avatar preethi February 19, 2012 / 12:47 pm

    very nice mama…

Leave a reply to A.V.Ramanathan Cancel reply