SOURCE::: MY FRIEND SHRI. N.VIJAYARAGHAVAN …AS A COUNTER TO MY BLOG ” ENNA KANNADI IDHU ?” !!!!..SWEET AND STRAIGHT POETIC REPLY …NICE TO SHARE WITH ALL…
NATARAJAN
கண்ணாடி மாறவில்லை! மனிதன் மாறிவிட்டான்!
கண்ணாடி கண்ணாடிதான் அண்ணே! உன்
கண்ணாலே உன்னை பாரு கண்ணே!
கருவறையில் இருந்து வந்த உம்முடம்பு!
செருவழிந்து இருமி இளைத்திருக்குமிப்போது!
தெருவழி செல்வோரும் உன்னை அறியாப்போது!
ஒருவழியாய் கண்ணாடிதானே காட்டுமெப்போது!
உயிரில்லா உடலுக்கு எதுவும் தேவையில்லை!
உயிரின்றி நம்மை யாரும் அறிவதில்லை!
உயிர் கொடுத்து ஆளாக்கும் அம்மாவை தெரிவதில்லை!
உயிரில்லா நம்முடம்பை கண்ணாடி காட்டுவதில்லை!
உண்மை உணர்ந்தால் உன்னை உணரலாம்!
உன்னை உணர்ந்தால் உடம்பை அறியலாம்!
உடம்பை அறிந்தால் உயிரை உணரலாம்!
உயிரை உணர்ந்தால் இறையை உணரலாம்!
இறையை முறையாய் அறியத்தான் கண்ணாடி
குறையாத உன்னுயிரே நானுணரும் கண்ணாடி!
இறையான உயிருக்கு உன்னுயிரே உடம்பு!
நிறைவாக இதை நம்புவர் ஆள்வர் விசும்பு!
N.VIJAYARAGHAVAN
Nice, poetic and philosophic reflection!
nice kavithai