SOURCE:::::: INPUT RECD. FROM ONE OF MY CONTACTS ….IN THE AGE OF EVEN AFFLUENT FAMILIES STAKE THEIR CLAIMS FOR ANYTHING FREE FROM GOVT. INCLUDING COLOR TV SETS , REACTION OF MAHA PERIAVAA IS SOMETHING DIFFERENT AND A LESSON FOR EVERYBODY….
Natarajan
ஒருநாள் சாயங்காலம் அதிக கூட்டமில்லாமல், சப்தமில்லாமல் ஸ்ரீமடம் அமைதியாக இருந்தது. பெரியவா ஒரு மூலையில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி நாலைந்து பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். அவர்களில் தலையை முண்டனம் பண்ணியிருந்த ஒரு வயஸான பாட்டியும் இருந்தாள். அச்சமயம் தமிழகத்தில் அப்போதைய ஆளுங்கட்சி முதியோர் உதவித் தொகை திட்டத்தை அமல் படுத்தியிருந்தது. அதைப் பற்றி அங்கிருந்தவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பாட்டி பெரியவாளிடம் ஏதோ சொல்லத் துடித்துக் கொண்டிருந்தாள். பல வர்ஷங்களாக மடத்துக்கு நித்யம் வருவாள்.
“என்ன சொல்லு..”
“பெரியவாகிட்ட ஒரு பிரார்த்தனை….” இழுத்தாள் பாட்டி.
“ஒனக்குக்கூட பிரச்சனையா!…” சிரித்துக்கொண்டே கேட்டார். அவர் சிரிப்பால் ஊக்கமடைந்த பாட்டி, “ஒண்ணுமில்லே…சர்க்கார்ல வயசானவாளுக்கு 20 ரூவா பென்ஜனா [பென்ஷன்] தராளாம்….ஆதரவு இல்லாதவாளுக்கும் கூட தராளாம்….”
“ஆமா….அதுக்கென்ன இப்போ?”
“வந்து…..எனக்கும் மடத்து மூலமா பெரியவா சிபார்சு பண்ணினா……அந்தப் பணம் நேக்கும் கெடைக்குமோல்லியோ..?”
“பேஷா கெடைக்குந்தான்! சரி…..ஒனக்கு இங்க என்ன கொறை?…..வேளாவேளைக்கு சாப்பாடு கெடைக்கறது, பொடவையும் தரா…..தங்கிக்க எடமும் இருக்கு…..அப்றம் ஒனக்கு எதுக்கு பணம்?…”
“இல்லை….சும்மாக் கெடைக்கறதே..ன்னுதான்”….ஈனஸ்வரத்தில் இழுத்தாள் பாட்டி.
“இதோ பாரு….நானுங்கூட எந்த ஆதரவும் இல்லாதவன்தான்! ஏதோ..இந்த மடத்ல ஒரு மூலேல ஒக்காந்துண்டு இருக்கேன்! நாம ரெண்டு பேருமே இந்த பென்ஷனுக்கு மனுப் போடலாமா?…..” குறும்பாக சிரித்துக் கொண்டே கேட்டதும், சுற்றி இருந்த எல்லாருடைய முகமும் மலர்ந்தது. பாட்டிக்கோ ஒரே வெட்கம்!
“நமக்கானும் உயிர் வாழறதுக்காக சாப்பாடு கெடைச்சுடறது…மழை, வெயிலுக்கு ஒதுங்க ஒரு எடமும், மானத்தை மறைக்க துணியும் இருக்கு….ஆனா, இதுல எதுவுமே கெடைக்காம திண்டாடற அசல் ஏழை ஜனங்களுக்குத்தான் இந்த பென்ஷன் திட்டம்…ன்னு கவர்ன்மென்ட்ல கொண்டு வந்திருக்கா! ஒனக்கு நான் இதை சிபார்ஸ் பண்ணி வாங்கிக் குடுத்தா….நெஜமாவே தகுதியான, நிராதரவா இருக்கற வயஸானவா, புருஷாளோ,பொம்பனாட்டியோ, அவாளுக்கு இந்த சான்ஸ் போயிடுமா இல்லியா?…ராஜாங்கத்ல குடுக்கற ஒதவிய தப்பா பயன்படுத்திக்கறது மஹா பாபம் !..”
தர்மம் தர்மம் என்கிறார்களே…..அது உருவம் தாங்கி வந்தால், அதுதான் பெரியவா!
—
WELL SAID. GOOD MESSAGE