SOURCE::::::: HOW DO WE USE OUR MOTHER TONGUE IN DAY TO DAY CONVERSATION ???……A NICE AND HILARIOUS MAIL RECD FROM ONE OF MY CONTACTS EXPLAIN THE STATUS OF OF OUR HANDLING OF TAMIL …. LET US TRY TO LOOK BACK AND START LEAENING ATLEAST NOW!!!!.BETTER LATE THAN NEVER!!!!!!!!
Natarajan
போலி தமிழ்
போலி அரசியல்வாதி, போலி ஆன்மீகவாதி போல தமிழிலும் போலி இருக்கிறதா என யோசிப்பவர்களுக்கு, இது டுபாக்கூர் போலியோ அல்லது கடையில் விற்கும் போலியோ இல்லை. இது இலக்கணப்போலி. தமிழ் பாடத்தை கட் அடித்து சினிமாவுக்கு போகாமல் படித்து இன்னும் மறக்காமல் இருந்தால் ஞாபகத்தில் இருக்கும். எனக்கு தமிழ் இலக்கணத்தில் பசுமரத்தாணி போல் ஓரே ஒரு இலக்கணம் மறக்காமல் இருக்கிறது. காரணம் S.V.சேகர்.
அவரின் ஒரு நாடகத்தில்
ஆசிரியர் : “பல் உடைந்ததா ?” இது என்ன இலக்கணம் சொல்லு?
S,V,சேகர் : ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் சார்.
ஆசிரியர் : எப்படிடா கரெக்டா சொன்ன!
S.V.சேகர் : ஈறு கெட்டா தான பல் உடையும்.
( ‘ஆ’ -வில் முடியும் சொற்கள் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)
இது போல் காமெடியாக எந்த ஆசிரியரும் எனக்கு தமிழ் இலக்கண்ம் சொல்லித் தராததால் மற்ற இலக்கணங்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. இலக்கணப்போலி என்பது நாம் பேச்சுவழக்கில் உபயோகப்படுத்தும் சொற்கள். எழுத்துக்கள் மாறி இருக்கும். ஆனால் அர்த்தம் மாறாது. போலியில் முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி மற்றும் முற்றுப்போலி என நான்கு வகைகள் உள்ளன
உதாரணத்திற்கு.
ஐந்து – அஞ்சு
கால்வாய் – வாய்க்கால்
ஐம்பது – அம்பது
கோவில் – கோயில்
வைத்த – வச்ச
கற்றுத்தருவது ஒரு தெய்வீக கலை. எந்தப் பாடமாக இருந்தாலும் கணிதமோ, அறிவியலோ, மொழிப்பாடமோ ஆரம்பத்தில் நமக்கு கற்றுத்தரும் ஆசிரியர் தான் அந்தப்பாடத்தின் மீது ஒரு பிடிப்போ, வெறுப்போ வருவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன். இப்பொழுது புதிதாக வந்துள்ள பாடத்திட்டங்கள் வெறும் மனப்பாடம் மட்டும் செய்து பள்ளிக்காலத்தை ஓட்டாமல் கொஞ்சம் யோசிக்கவும் வைப்பது போல் தெரிகிறது. பெற்றோர்கள் வீட்டுப்பாடங்களை தாங்களே செய்து கொடுக்காமல் மாணவர்களை செய்யச் சொல்லி ஊக்கிவித்தால் நல்லது.
பள்ளிகளில் ஆங்கிலம் பேசுவதை பெருமையாக நினைத்துக் கொண்டும், சினிமா படங்களின் தலைப்பில் (மட்டும்) தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தால் வருங்காலத்தில் தமிழின் நிலைமை தமிழனின் நிலை போல் பரிதாபமாக போய் விடும். முடிந்தவரை தமிழ்ப்பதிவர்கள் Labels மற்றும் Search Description-ல் தமிழ் வார்த்தைகள் சேருங்கள். கூகிள் தேடு பொறியில் தமிழில் தேடுங்கள்.
இப்பொழுது நாம் பேசும் தமிழில் எத்தனை போலிகள் உள்ளன என சந்தேகப்படுபவர்களுக்கு வடிவேலுவின் பதில்
நீங்க பிடுங்கிற எல்லாமே தேவையில்லாத ஆணி தான்.