குசேலர் தினம் … இது தெரியுமா உங்களுக்கு ?

குழந்தைகள் தினம் , மகளிர் தினம், ஆசிரியர் தினம் …என்றெல்லாம் நாம் கேட்டதுண்டு. குசேலர் தினம் பற்றி உங்களுக்கு தெரியுமா !!!!

தம் பால்ய நண்பனான கிருஷ்ணனை காண , துவாரகை சென்றார் , குசேலர். அங்கவஸ்திரத்தில் , அவர் முடிந்து சென்ற அவலை கண்ணன் கேட்டு வாங்கி , ஒரு பிடி அளவு எடுத்து ரசித்து சாப்பிட்ட பிறகு , ” திருப்தி …அக்ஷ்யம் ” என்று பெரு மகிழ்ச்சியுடன் கிருஷ்ணன் கூறினார். கண்ணன் அந்த அவலை எடுத்து சாப்பிடும் சமயம் , குசேலரின் குடில் மாளிகையாக மாறி விட்டதாம் ! வீடு நிறைய தானியங்கள் …குசேலர் மனைவி சுசிலையும் அவளது 27 குழந்தைகளும் , தக தகக்கும் பட்டு ஆடைகளுடன் , மின்னும் தங்க நகைகளுடன் ஜொலித்தனர் !!!!
இது நாம் அறிந்த சரிதம் !!!!

குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல் கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரிலும் , சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ உத்திர குருவாயூரப்பன் திருக்கோவிலிலும் , மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர் ..

அன்றைய தினம் , ஸ்ரீ குருவயூரப்பனக்கு அவலும் , அவல் பாயசமும் நைவேத்யம் செய்யப்படுகிறது . பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !!!!!

source::::DEEPAM..Tamil bimonthly

Natarajan

Leave a comment