source:::: unknown…..input from my friend…. nice one to read and share…
Natarajan
வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரிசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க
சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலைவரின் வாரிசுகள் எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை!
இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கண இலக்கியம் பூரணமாய் அமைய
இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும் ஏனோ
ஒரு கவிதை எழுத வரவில்லை
கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரிசுகள்
டஜன் கணக்கில் இருக்க
பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானங்களின்
தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை!
கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற்ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை!!
விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
கிடைப்பது இல்லை !!!!