ஒரு நிகழ்ச்சியில் ” எமனின் வாஹனம் எது தெரியுமா ” என்று ஒரு சிறுவனை கேட்டார் , வாரியார் . உடனே , எருமை மாடு என்று பதில் வர வாரியார் சுவாமிகள் , அந்த சிறுவனுக்கு பரிசு கொடுத்தார் .. பின்னர், அவரே தொடர்ந்து , ” ஏன் எருமை மாடு வாகனம் தெரியுமா “? என்று கேட்டு , விளக்கமும் கூறினார். ” எமன் நம்மை மரணத்துக்கு இட்டு செல்கிறான் . எருமை வேகமாக வந்தால் , நாம் சீக்கிரமாக மறைந்து போய்விடுவோம் !. அதனால் எருமை மெதுவாகத்தான் வரும் !!!”
முருகப் பெருமான் நம்மை காக்கும் கடவுள் …நமது கஷ்டம் எல்லாம் சொல்லி ” முருகா” என்று நாம் குரல் கொடுத்தால் , மயிலில் ஏறி , வேகமாக முருகன் வருவான்…
அது போல , பகவான் கிருஷ்ணனும் , நம்மை காக்கும் கடவுள் .. ” கிருஷ்ணா ” என்று குரல் கொடுத்தால் , கருட வாகனத்தில் வேகமாக பறந்து வந்து நம்மை காப்பாற்றுவான் !!! என்று முடித்தார் வாரியார் சுவாமிகள் ….
source::::DEEPAM…Tamil Bi monthly..
natarajan