மனைவி: ஏங்க, ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணணும்னு சொல்வாங்க. நம்ம கல்யாணத்துக்கு எத்தனை பொய் சொன்னீங்க?
கணவன்: ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்
மனைவி: அப்படியா? என்ன பொய் சொன்னீங்க?
கணவன்: உன்னைப் பிடிச்சுருக்குன்னு ஒரே ஒரு பொய்தான் சொன்னேன்
(வேகமாக மணியடித்தபடி சென்று
கொண்டிருந்த தீயணைப்பு வண்டியைப்
பார்த்துவிட்டு பக்கத்து வீட்டுப் பையன்)
இந்த வேகத்துல போனால், ஒரு ஐஸ் கூட விக்க முடியாது அங்கிள்!
ஒருவன் டீக்கடைக்குப் போனான்.
அவன் பெஞ்சுக்கு எதிரில் இன்னொருவன் டீ குடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய காலடியில் ஒரு நாய் படுத்துக் கிடந்தது. இவன் பயந்துபோய், “”உங்க நாய் கடிக்குமா?” என்று கேட்டான். அதற்கு அவன் “இல்லை’ என்றான். நிம்மதியாக உட்கார்ந்து ஒரு பிஸ்கட்டை இவன் வாயில் வைக்கப் போகும்போது, நாய் திடீரெனப் பாய்ந்து இவன் கையைக் கடித்துவிட்டது.
அலறியபடி இவன் கேட்டான்: “ஏம்ப்பா… உன் நாய் கடிக்காது என்றாயே?”
“ஆம். இது என்னுடைய நாய் இல்லை. என் நாய் வீட்டில் இருக்கிறது” என்றான் அவன்.
source::::input from a friend of mine..
Natarajan