தூரத்து வெளிச்சம் …2
————————————–
தூரத்தில் உள்ளதை வெளிச்சம் போட்டு
காட்டும் வீட்டு தொலைக்காட்சி பெட்டி
முதல் என்ன சேதி …என்ன சேதி
என்று நொடிக்கு நொடிக்கு பார்க்க
வைக்கும் கை பேசி வரை வீட்டில்
எல்லோரையும் வளைத்துப் போட்டு விட்ட
வலைப் பின்னல் சிக்கலில் அப்பா அம்மா
அண்ணன் தம்பி அக்கா தங்கை எல்லாம்
தூரத்து சொந்தமே !
தூரத்து வெளிச்ச மோகம் தீர்ந்து வீட்டின்
விளக்கு வெளிச்சத்தை நாம் ரசிக்கும் அன்று
விளங்கும் தன்னால் நம் சொந்த பந்த
அருமை என்னவென்று !
நடராஜன்
22 Jan 2018